மூடு

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 12/07/2019

செ.வெ.எண்:-36/2019 நாள்:- 11.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியினை பதிவு செய்ய ஆதார் அட்டை எண், குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கைபேசி எண், மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று எடுத்து வரவேண்டும்

மேலும், வருகின்ற 24.07.2019 வரை வேலைவாய்ப்பு பதிவு பணி அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப் பணி நடைபெறும் பதினைந்து நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்கத் தொடங்கிய முதல் நாளையே பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும். மேலும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை www.tnvelaivaaipppu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் இணைய தளம் வழியாக தங்கள் அளவிலேயே பதிவு செய்து கொள்ளலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்