மூடு

108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.

வெளியிடப்பட்ட தேதி : 21/08/2020

செ.வெ.எண்:-14/2020

நாள்:19.08.2020

திண்டுக்கல் மாவட்டம்

108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்கள் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம்.

தமிழகத்தில் 950-க்கும் மேற்பட்ட 108 ஆம்பலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மருத்துவ உதவியாளர் பணிக்கு 18 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., லைப் சயின்ஸ் பாடப்பிரிவுகளான தாவரவியல், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, பயோடெக், பயோகெமிஸ்ட்ரி ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் பணிக்கு 24 வயதிற்கு மேலும் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக(HMV) வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இலகுரக (LMV) வாகன ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் பெற்றிருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஒரு ஆண்டு சென்னையிலும், அதன் பின்னர் முன்னுரிமை அடிப்படையில் அவர்களது சொந்த மாவட்டத்திற்கு பணி நியமனம் செய்யப்படுவர். 12 மணி நேரம் ஷிப்ட் முறையில் பகல், இரவு என பணியமர்த்தப்படுவர்.

தகுதியுடைய நபர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம், அடையாளச்சான்று, முகவரிச்சான்று மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 24.08.2020 மற்றும் 25.08.2020 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளலாம். நேர்முகத்தேர்வுக்கு வரும் நபர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு 7397724838, 7397724830, 7397724845, 7397724860 ஆகிய கைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் திரு.விமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.