மூடு

2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

வெளியிடப்பட்ட தேதி : 02/08/2021

செ.வெ.எண்:-55/2021

நாள்:-28.07.2021

2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

இந்திய அரசு, ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம விருது” என்ற பெயரில் பத்ம விபூசன், பத்ம பூசன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்த, சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அதில் விளையாட்டு துறை சார்பாக பத்ம விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

அதன்படி, இந்திய அரசின் சார்பில் 2022-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இவ்விருதிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் இதர முக்கிய விவரங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15.09.2021 க்குள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்-624004 என்ற முகவரியிலும், 0451-2461162 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.