2022-2023-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகிவற்றிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்
செ.வெ.எண்:-38/2022
நாள்:24.01.2022
2022-2023-ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகிவற்றிற்கு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகிவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஜனவரி-2022 முதல் 30.04.2022 நள்ளிரவு 11.59 மணி முடிய www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம், ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள Prospectus-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.04.2022. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக, உதவி இயக்குநரிடம் நேரிலோ அல்லது 0451–2970049 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.