மூடு

73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்

வெளியிடப்பட்ட தேதி : 16/08/2019
i1

செ.வெ.எண்:- 40/2019 நாள்:- 15.08.2019

i2i3

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 73-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளை பொன்னாடை போர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கௌரவித்தார்.

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையைச் சார்ந்த 25 அலுவலர்களுக்கும், அரசுத் துறைகளைச் சார்ந்த 109 அலுவலர்களுக்கும் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் 62 பயனாளிகளுக்கு ரூ.92.33 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2019) 73-வது சுதந்திர தினவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட மாவட்ட ஆட்சி;த்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் காலை 9.05 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் சமாதானத்தின் அடையாளமாக வெண்புறாக்களும், வண்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, காவல் துறை, ஊர்க்காவல் படை, என்.சி.சி அணிவகுப்பு மரியாதையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு பொன்னாடை போர்த்தி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் கௌரவிக்கப்பட்டு, காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த 25 அதிகாரிகளுக்கும், 109 அரசுத் துறைகளைச் சார்ந்த அரசு அலுவலர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில் வருவாய்த்துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.4.4 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.43,100 மதிப்பீட்டில் உருப்பெருக்கி கண்ணாடி, செயற்கை கால், பிரெய்லி கைகடிகாரம், கருப்பு கண்ணாடி மற்றும் ஒளிரும் ஊன்று கோல், காதொலிகருவிகளும் மற்றும் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.65,000 மதிப்பீட்டில் தொகுப்பு நிதி கல்வி உதவித் தொகையும், சமூக பாதுகாப்பு நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.20 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4.20 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் சூரிய சக்தியுடன் பசுமை வீடுகளுக்கான ஆணை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.16.48 இலட்சம் மதிப்பீட்டில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் நிழல் வலைக்கூடம், தக்காளி குழித்தட்டு நாற்றுகள், பசுமைக்குடில், சிப்பம் கட்டும் அறை மானியங்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைநலத்துறையின் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.25,770; மதிப்பீட்டில், விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் விலையில்லா தேய்ப்பு பெட்டிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.20,072; மதிப்பீட்டில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகள் வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.700; மதிப்பீட்டில் சிறுதானிய நூண்ணூட்ட உரம் வழங்குதல், தமிழ்நாடு ஆதிதிராவிட வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.23.55 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.45.50 இலட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கி கடனுதவி என ஆக மொத்தம் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, 62 பயனாளிகளுக்கு ரூ.92.33 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் சிறந்த முறையில் மழைநீர் சேகரி;ப்பு அமைப்பு உருவாக்கிய கட்டிட உரிமையார்கள் 50 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு மைதனாத்தில் மாணவ, மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, எஸ்.எம்.பி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அக்சுதா அகாடமி, சௌந்தரராஜா வித்தியாலாய, ராயப்பன்பட்டி ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என ஆக மொத்தம் 6 பள்ளிகளைச் சார்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேகரிப்பு – பூமியை பாதுகாத்தல், தமிழர் பண்பாடு, தமிழர்களின் சிறப்பு, ஆடுவோமே பல்லு பாடுவோமே, மூன்று மத ஒற்றுமை குறித்த தேசிய ஒருமைப்பாடு போன்ற பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய கண்கவர் கலைநிகழ்ச்சியை நடத்தினர். நிறைவாக கலை நிகழ்;ச்சிகளில் கலந்து கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பா.வேலு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.ராஜ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

i4i5

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்.