மூடு

75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு பல்துறை பணி விளக்க கண்காட்சி, திண்டுக்கல் குமரன் பூங்கா கலையரங்கம் மைதானத்தில் 15.04.2022 முதல் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2022

செ.வெ.எண்:-30/2022

நாள்:13.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

75வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு பல்துறை பணி விளக்க கண்காட்சி, திண்டுக்கல் குமரன் பூங்கா கலையரங்கம் மைதானத்தில் 15.04.2022 முதல் 7 நாட்கள் நடைபெறவுள்ளது.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி, திண்டுக்கல் குமரன் பூங்கா கலையரங்கம் மைதானத்தில் 15.04.2022 முதல் 7 நாட்கள் தினமும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறவுள்ளது.75-வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா, பல்துறை பணி விளக்க கண்காட்சி துவக்க விழா 15.04.2022 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. அமுதப்பெருவிழா கண்காட்சியினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பல்வேறு அரசுத்துறை அரங்குகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தொடங்கி வைக்கிறார்.இந்தக் கண்காட்சியில், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் துறைவாரியாக அரங்குகள் அமைக்கப்பட்டு, பல்துறை பணி விளக்க கண்காட்சி அமைக்கப்பட்டு துறை அலுவலர்கள் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. கண்காட்சியில், தினமும் மாலை 04.00 மணி முதல் பல்சுவை கலைநிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நாடகங்கள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கண்காட்சியை காண நுழைவு கட்டணம் இல்லை. கண்காட்சியில் பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்தக்கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்வையிட்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.