Close

TAHDCO-CM-ARISE SCHEME

Publish Date : 21/10/2024

செ.வெ.எண்:-48/2024

நாள்:-18.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து மானியக்கடன் பெற தாட்கோ மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார அதிகாரமளித்து வளம் உண்டாக்க, முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டம் (CM ARISE) டிசம்பர் 2023 முதல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 55 வயதிற்குட்பட்ட, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்திற்குள் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க மானியக்கடன் வழங்கப்பட்டு வருகிறது.

விண்ணப்பதாரரே தொழில் தேர்வு செய்யலாம். மொத்த திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம் அல்லது ரூ.3.50 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். மீதமுள்ள தொகை விண்ணப்பதாரரின் பங்குத்தொகையுடன் சேர்த்து வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.

இத்திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு ரூ.1.56 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து பயன்பெற http://newscheme.tahdco.com என்ற தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) இணையதளத்தில் CM ARISE திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தாட்கோ அலுவலக எண் 0451-2460096 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.