Close

TAHDCO – Petrol Pumb loan

Publish Date : 15/09/2023

செ.வெ.எண்:-28/2023

நாள்:13.09.2023

திண்டுக்கல் மாவட்டம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்கள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவர்கள் பெட்ரோல் நிலையம் அமைக்க, தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 21 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த ஆண், பெண் அனைவரும் www.petrolpumpdealerchayan.in என்ற இணையத்தில் 27.09.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பெட்ரோலியம் நிறுவனத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் முதல் முறையாக கொள்முதல் செய்யும் பெட்ரோல் மற்றும் டீசல் (ஒரு டேங்கர்) தொகையினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டியில் தாட்கோ மூலமாக கடனாக வழங்கப்படும்.

பாரத் பெட்ரோலியம் லிமிடெட் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தின் பயன்பெற தாட்கோ தலைமை அலுவலக மாநில திட்ட மேலாளர் (திட்டங்கள்) கைபேசி எண்ணில் 7358489990 தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, “மாவட்ட மேலாளர், தாட்கோ, 2வது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், திண்டுக்கல்“ அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி (எண் 0451-2460096), அலைபேசி (எண் 9445029460) வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.