Tamco loan scheme – Notification
செ.வெ.எண்:-74/2024
நாள்:-27.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் வழங்கப்படும் கடன் திட்டங்களுக்கு ஆண்டு வருமானம் உயர்த்தப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனி நபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
தனிநபர் கடன் திட்டம் கீழ் பயன் பெற நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/-க்கு மிகாமலும் இருந்த குடும்ப ஆண்டு வருமானமானது தற்போது ரூ.3,00,000/- வரை உயர்த்தப்பட்டுள்ளது.
தனிநபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000/-மும், கைவினைக் கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5% பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/-மும், சுய உதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7% வட்டி விகிதத்திலும், சிறுபான்மையின மாணவ / மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.20,00,000/-மும், வெளிநாடுகளில் தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.30,00,000/-ம் வரையில் 3% வட்டி விகிதத்திலும் வழங்கப்படுகிறது.
சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில்கடன் திட்டத்தின் கீழ் தனிநபர் கடன் ஆண்களுக்கு 8%, பெண்களுக்கு 6% வட்டிவிகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000/-மும், கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 6% பெண்களுக்கு 5% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/-மும், சுயஉதவிக் குழுக்கடன் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டிவிகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/-மும், சிறுபான்மை மாணவ மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை / முதுகலை தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.20,00,000/-மும், வெளிநாடுகளில் தொழிற்கல்வி / தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.30,00,000/-ம் வரையிலும் கல்விக் கடனுதவி வழங்கப்படுகிறது. (சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில்கடன் கீழ் பயன் பெற நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறத்தில் ஆண்டு வருமானம் ரூ.8,00,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்)
தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த சிறு தொழில் விரிவாக்க கடன், கைவினை மற்றும் பாரம்பரியயான சார்ந்த தொழில் செய்ய மற்றும் விரிவாக்கக் கடன், தொழில் மற்றும் தொழில்துறை சார்ந்த சேவைக்கும், இலகு ரக மோட்டார் வாகனம் வாங்குவதற்கும் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடன் கோரும் விண்ணப்பத்தில் மதத்திற்கான சான்று, ஆதார்அட்டை, வருமானசான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன்பெறும் தொழில் குறித்த விவரம் / திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளிமாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate), கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது / செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் / மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்று அதனைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்துப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.