Close

Tamil development Department

Publish Date : 15/11/2021

செ.வெ.எண்:-26/2021

நாள்:12.11.2021

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி திண்டுக்கல் மாவட்ட அளவில் 12.11.2021 அன்று திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன. முற்பகல் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டியை வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.அ.ஜார்ஜ்ஆரோக்கியதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்ட அளவில் 26 பள்ளிகளில் இருந்து 27 மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். பள்ளிப்போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளில் முதுகலைப்பட்டதாரி தமிழாசிரியர்களாக பணியாற்றிவரும் திரு. இரா.வெங்கடேசபிரபு, திருமதி சு.பத்மபிரியா, திரு. கா.வீரமுத்து ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டனர். போட்டியில் திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் செல்வி கை. சொர்ணதர்ஷ்னி முதல் பரிசையும், திண்டுக்கல் எம்.எஸ்.பி.சோலை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் செல்வன் பா.கோகுல கண்ணன் இரண்டாம் பரிசையும், வேடசந்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் செல்வி ப.சாதானா மூன்றாம் பரிசையும் பெற்றனர். அத்துடன் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கான சிறப்புப் பரிசினை நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12ஆம்வகுப்பு பயிலும் செல்வன் ம.மதன்குமார் மற்றும் வேடசந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் செல்வன் ப.விமல்சாஸ்தாவும் பெற்றனர்.

கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டி 12.11.2021 பிற்பகல் நடைபெற்றது. எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்;கல்லூரி தமிழ்த்துறை இணைப்பேராசிரியர். முனைவர் க.நாகநந்தினி போட்டியை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட அளவில் 10 கல்லூரிகளிலிருந்து 22 மாணவ மாணவியர் பங்கேற்றனர். கல்லூரிப்போட்டிக்கு திண்டுக்கல் மாவட்ட கல்லூரிகளில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்களாக பணியாற்றிவரும் முனைவர் கு.பெரியசாமி, முனைவர் மா.பாண்டீஸ்வரி, முனைவர் சோ.தண்டபாணி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர்.

போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் அருள்மிகு பழனியாண்டவர் கலைப்பண்பாட்டுக் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவன் மோ.நாக அர்ஜீன் முதல்பரிசையும், திண்டுக்கல் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு; இளங்கலைத்தமிழ் பயின்று வரும் மாணவி செல்வி ஜோ.கேத்ரின்மெர்லினா இரண்டாம் பரிசையும், ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் செல்வி ம.அமுதபிரியா மூன்றாம் பரிசையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.5000/-உம் இரண்டாம் பரிசாக ரூ.3000/-உம், மூன்றாம் பரிசாக ரூ.2000/-உம், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக ரூ.2000/-உம் பாராட்டுச்சான்றிதழுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விரைவில் வழங்கப்பெறும். போட்டிகளுக்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (முகூபொ) முனைவர் ப.நாகராசன் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் திருமதி இராசலெட்சுமி, திரு.விசயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (முகூபொ) முனைவர் ப.நாகராசன் அவர்கள் தெரிவித்தார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்