Close

Gandhi Jayanti Celebration by Tamil Development Dept.

Publish Date : 04/10/2021

செ.வெ.எண்:-11/2021

நாள்:04.10.2021

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி திண்டுக்கல் மாவட்ட அளவில் 02.10.2021 அன்று திண்டுக்கல் எம்.வி.எம்.மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெற்றன.

முற்பகல் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான போட்டியை வேம்பார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திரு.அ.ஜார்ஜ் ஆரோக்கியதாஸ் அவர்கள் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட அளவில் 60 பள்ளிகளில் இருந்து 108 மாணவ மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றனர். பள்ளிப்போட்டிக்கு திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளில் முதுகலைப்பட்டதாரி தமிழாசிரியர்களாக பணியாற்றி வரும் முனைவர் சு.சாந்தி, திருமதி. பா.தேவகி, திருமதி சௌ.கவிதா ஆகியோர் நடுவர்களாக செயற்பட்டனர். போட்டியில் சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் செல்வி வா.ராஜேஸ்வரி முதல் பரிசையும், சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் செல்வி இரா.மோத்திகாஸ்ரீ இரண்டாம் பரிசையும், திண்டுக்கல, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர் செல்வன் இரா.கிஷோர் மூன்றாம் பரிசையும் பெற்றனர். அத்துடன் அரசுப்பள்ளி மாணவ மாணவியருக்கான சிறப்புப் பரிசினை திண்டுக்கல் மாவட்ட நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவன் செல்வன் மு.முஹம்மது ஷமில் மற்றும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர்நல மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வரும் மாணவன் செல்வன் ரா.ஹரிஹரனும் பெற்றனர்.

பிற்பகல் நடைபெற்ற கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி 02.10.2021 பிற்பகல் நடைபெற்றது. எம்.வி.எம் கல்லூரி பொருளியியல் துறை இணைப்பேராசிரியர். முனைவர் ஜோ.நளகம் போட்டியை தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட அளவில் 20 கல்லூரிகளிலிருந்து 29 மாணவ மாணவியர் பங்கேற்றனர். கல்லூரிப் போட்டிக்கு திண்டுக்கல் மாவட்ட கல்லூரிகளில் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர்களாக பணியாற்றி வரும் முனைவர் க.நாகநந்தினி, முனைவர் மா.பாண்டீஸ்வரி, முனைவர் சோ.தண்டபாணி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்றனர். போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலைத் தமிழ் பயின்று வரும் மாணவி செல்வி ஜோ.கேத்ரின்மெர்லினா முதல் பரிசையும், திண்டுக்கல, காந்தி கிராமிய நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டு முதுகலைத் தமிழ் இலக்கியம் மற்றும் இந்திய இலக்கியம் பயின்று வரும் மாணவி செல்வி ந.சிவப்பிரியா இரண்டாம் பரிசையும், மூன்றாம் பரிசை புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிதவியல் பயின்று வரும் செல்வி சி.மெர்சி ஆகியோர் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.5000/-யும், இரண்டாம் பரிசாக ரூ.3000/-யும், மூன்றாம் பரிசாக ரூ.2000ஃ-யும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசாக ரூ.2000/-யும் பாராட்டுச் சான்றிதழுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் விரைவில் வழங்கப்படும். போட்டிகளுக்கான ஏற்பாட்டினை திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (முகூபொ) முனைவர் ப.நாகராசன் தலைமையில் தமிழ் வளர்ச்சித் துறைபணியாளர்கள் திருமதி இராசலெட்சுமி, திரு.விசயகுமார் ஆகியோர் செய்திருந்தனர். இவ்வாறு திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் (முகூபொ) முனைவர் ப.நாகராசன் அவர்கள் தெரிவித்தார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.