Close

Tamil Nadu Irrigation Management Modernization Project meeting

Publish Date : 08/03/2023
.

செ.வெ.எண்:-54/2023

நாள்: 24.02.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் செயல்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கூடுதல் முதன்மைச் செயலாளர் / திட்ட இயக்குநர் (தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்) தலைவர் தென்காசி திரு.எஸ்.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசினர் விருந்தினர் மாளிகை கூட்டரங்கில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் செயல்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கூடுதல் முதன்மைச் செயலாளர் / திட்ட இயக்குநர் (தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம்) தலைவர் தென்காசி திரு.எஸ்.ஜவஹர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப அவர்கள் முன்னிலை வகித்தார்.

இதுகுறித்த விபரம் பின் வருமாறு:-

தமிழ்நாடு அரசு உலக வங்கி நிதி உதவியுடன் தமிழகத்தில் நீர்வள நிலவள திட்டம் செயல் படுத்தப்படுகிறது. உலக வங்கியின் 70 சதவிகித பங்களிப்பு (ரூ.2962.00 கோடி) மற்றும் 30 சதவிகித மாநில நிதி பங்களிப்புடன் (ரூ.888.60 கோடி) தமிழ் நாடு முழுவதும் உள்ள 47 ஆற்றுப் படுகைகளில் நீர்வள நிலவள திட்டம் (TN IAMP II) செயல்படுத்தப்படுகிறது.

தமிழ் நாட்டின் 7 துறைகள் ஒருங்கிணைந்து, அதாவது வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் தோடப்பயிர்கள்துறை, கால்நடை பராமரிப்புதுறை, மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், தமிழ் நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை அறிவியல் ஆகிய 3 பல்கலைக் கழகங்களுடன் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிகள் இத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திட்ட வளர்ச்சியின் குறிக்கோளானது (PDO) நீர்ப்பாசன விவசாயத்தின் உற்பத்திறன் அதிகரித்தல் மற்றும் காலநிலை தாங்கும் தன்மையை மேம்படுத்துதல், பயிரிடுதலில் பல்வகைப் படுத்துதல், நீர் மேலாண்மை மேம்படுத்துதல் மற்றும் வேளாண்தொழில் முனைவோர்களுக்கு சந்தை வாயப்புகளை அதிகப்படுத்துதல் போன்றதாகும்.

23.02.2023-அன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர்வள நிலவள திட்டப்பணிகள் குறித்து பல்வேறு துறைஅலுவலர்களுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் / திட்ட இயக்குநர், TN IAMP திட்டம் அவர்கள் ஆய்வுகள் மேற்கொண்டார்.

நீர்வளத்துறை – திண்டுக்கல்மாவட்டம் :

தமிழ் நாடு அரசின் நீர்வள நிலவள திட்டம் II (Phase I)-இன்கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் மஞ்சளாறு உபவடிநிலத்தில் 9 கண்மாய்கள் 2 அணைக்கட்டுகள், 34.32 கி.மீ நீளத்திலுள்ள வழங்கு வாய்க்கால்களில் ரூ.11.02 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் சிறுமலையாறு உபவடி நிலத்தில் 9 கண்மாய்கள், 26.32 கி.மீ நீளத்திலுள்ள வழங்கு வாய்க்கால்ளில் ரூ.4.28 கோடி மதிப்பீட்டிலும் நவீனப்படுத்துதல் மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மஞ்சளாறு உபவடி நிலத்தில் 3189.97 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களில் மற்றும் சிறுமலையாறு உபவடி நிலத்தில் 931.39 ஹெக்டேர் ஆயக்கட்டு நிலங்களில் மொத்தம் 5422 பாசன விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இப்பணிகள்அனைத்தும் 2019 ஆம் ஆண்டு முடிவு பெற்றது. கடந்த மூன்று ஆண்டுகளில் மஞ்சளாறு உபவடி நிலத்தில் முற்றிலும் பாசனம் பெறாத நிலங்களாக இருந்த 1028.34 ஹெக்டேர் நிலங்களும் மற்றும் சிறுமலையாறு உபவடி நிலத்தில் முற்றிலும் பாசனம் பெறாத நிலங்களாக இருந்த 294.30 ஹெக்டேர் நிலங்களும் பாசனவசதி பெறும் வகையில் 100% இலக்கு எட்டப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் மே 2022-இல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி ஆர்.ஏ.பிரியங்கா, இ.ஆ.ப., அவர்கள், வேளாண்மை இணை இயக்குனர் திருமதி.அ.அனுசுயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர்கள் திரு.கோபி, திரு.சுகுமார், வேளாண்மை உதவி அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.