Close

Tamilnadu Legislative Assembly – Records Review Committee Meeting

Publish Date : 21/08/2019
1

2

செ.வெ.எண்:50/2019 நாள்:21.08.2019

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்பட்ட ஏடுகள் குழு ஆய்வு கூட்டம் – குழுத்தலைவர் திரு.ப.சத்திய நாராயணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் இன்று (21.08.2019) தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு தலைவர் திரு.ப.சத்திய நாராயணன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ஆண்டறிக்கை காலதாமாக சட்டப்பேரவையில் வைக்கப்பட்டது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.விஜயலட்சுமி.இ.ஆ.ப அவர்கள் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 2011-12 முதல் 2016-17 வரையிலான ஆண்டறிக்கைகள் சட்டப்பேரவையில் காலதாமதமாக வைக்கப்பட்டவைகள் குறித்தும் மற்றும் அதற்கான காரணங்கள் குறித்தும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு உறுப்பினர்களாகிய சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ப.ஆடலரசன் (திருத்துறைப்பூண்டி தொகுதி), திருமதி.வி.கஸ்தூரி வாசு (வால்பாறை தொகுதி), திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர் தொகுதி), கூடுதல் செயலாளர் திரு.ந.இரவிச்சந்திரன், துணைச் செயலாளர் திரு.வ.பூபாலன் ஆகியோர்களுடன் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு, ஆண்டுகள் தோறும் துறை ரீதியாக ஆண்டறிக்கையினை கால தாமதமாக சமர்ப்பிக்கும் போது, அதுகுறித்து காரணங்களை சம்மந்தப்பட்ட துறைசார்ந்த அலுவலர்கள் மூலமாக பெற்று, அதனை பரிசீலித்து, அது தொடர்பான அறிக்கையினை அரசிற்கு சமர்பித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அரசு பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக ஒவ்வொரு துறையின் மீது தனிகவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வறாக துறை ரீதியாக மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆண்டறிக்கை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில், காலதாமதமாக ஆண்டறிக்கைகளை பேரவையில் வைக்கப்பட்ட காரணங்கள் குறித்து, இன்றையதினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் விளக்கம் கோரப்பட்டது. துறை சார்ந்த அலுவலர்கள் காலதாமதமான ஆண்டறி;க்கைகள் சமர்ப்பித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளனர். இதனை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு, பரிசீலித்து, அரசிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கும். மேலும், இனிவரும் காலங்களில் அலுவலர்கள் காலதாமதமின்றி ஆண்டறிக்கையினை பேரவைக்கு சமர்பிக்கவும் துறை ரீதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நாளை தினம் (22.08.2019) சுற்றுலாத்துறையின் மூலமாக காலதாமதமான ஆண்டறிக்கைகள் சமர்ப்பித்தது குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு தலைவர் திரு.ப.சத்திய நாராயணன் அவர்கள் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, கொடைக்கானலில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை முன்வைக்கப்;பட்ட ஏடுகள் குழு தலைவர் மற்றும் குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.ஆ.ராஜ்குமார், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சுரேந்திரன்;, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றம் சுற்றுலாத்துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.