Close

TamilNadu Pollution Control Board – Vinayagar Chathurthi Water Bodies

Publish Date : 15/09/2023

செ.வெ.எண்:-32/2023

நாள்:13.09.2023

திண்டுக்கல் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தியின்போது, இரசாயனக் கலவையற்ற விநாயகர் சிலைகளை மட்டும் வழிபாட்டிற்கு பயன்படுத்தி, தெரிவு செய்யப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின்போது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கப்படும் வழக்கம் உள்ளது. இரசாயன வரணப்பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடுகின்றன.

எனவே, களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித இரசாயனக் கலவையற்றதுமான விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டிற்கு பயன்படுத்த வேண்டும். இத்தகைய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். இரசாயன வர்ணம்(பெயிண்ட்) பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது தவிர்க்கப்பட வேண்டும். அரசினால் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் கோட்டைக்குளம், நத்தம் அம்மன்குளம், வத்தலக்குண்டு கண்ணாப்பட்டி ஆறு, நிலக்கோட்டை அணைப்பட்டி வைகை ஆறு, பழனி சண்முகாநதி, ஒட்டன்சத்திரம் தலைக்குத்து அருவி, கொடைக்கானல் டோபிகானல், வேடசந்தூர் குடகனாறு, வடமதுரை நரிப்பாறை, குஜிலியம்பாறை பங்களாமேடு குளம், கன்னிவாடி மச்சகுளம், சின்னாளப்பட்டி தொம்மன்குளம், தாடிக்கொம்பு குடகனாறு, பட்டிவீரன்பட்டி மருதாநதி அணை, எரியோடு நந்தவனக்குளம், சாணார்பட்டி மதனக்குளம் ஆகிய இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் மேலே கூறப்பட்ட இடங்களில் மட்டுமே இரசாயன வர்ணம் பூசப்படாத சிலைகளை கரைக்கவும், விநாயகர் சதுர்த்தியை பாரம்பரிய வழக்கப்படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.