Tamilvalarchi -Awareness Rally

செ.வெ.எண்:-01/2023
நாள்:-01.03.2023
திண்டுக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழாவினை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(01.03.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா இன்று(01.03.2023) தொடங்கி 08.03.2023 வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(01.03.2023) பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில், ”இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே, தமிழன் என்று சொல்லுங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள், எங்கும் தமிழ் எதிலும் தமிழ், தமிழ் உயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும், பிற மொழிகளை வாழவைத்து தன்னையம் காத்து நிற்கும் மொழி தமிழ் மொழியே” என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி, பூ மார்க்கெட், பிரதான சாலை வழியாக சென்று திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகில் முடிவடைந்தது. பேரணியில் கலந்துகொண்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில், மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் பெ.சந்திரா, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.பெ.இளங்கோ, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழ்ச்செம்மல் திரு.ம.தமிழ்ப்பெரியசாமி, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.