Tamilvalarchi – Official Language Legislation Week
aசெ.வெ.எண்:-05/2023
நாள்:-02.03.2023
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளினை நினைவுகூரும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஒரு வார காலம் (01.03.2023 முதல் 08.03.2023 வரை) நடைபெற்று வரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நிகழ்ச்சியின்இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் அனைத்துத்துறை அரசுப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
2019-2020ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை அறிவிப்பில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் நிகழாண்டில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென அரசு ஆணையிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 01.03.2023 முதல் 08.03.2023 வரையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வாக இன்று(02.03.2023) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கணினித் தமிழ் ஒருங்குறி பயன்பாடு குறித்து காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை) முனைவர் சி. சிதரம்பம் அவர்கள் அனைத்துத்துறை அரசுப் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார். இப்பயிற்சியில் கலந்துகொண்ட அனைத்து அரசுப் பணியாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாக இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திரு.பெ.இளங்கோ வரவேற்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தின் உதவியாளர் திருமதி பெ.இராஜலெட்சுமி நன்றியுரையாற்றினார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.