Tamilvalarchi – Prize Distribution

செ.வெ.எண்:42/2021
நாள்:16.12.2021
அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாள் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 02.10.2021 மற்றும் 12.11.2021 ஆகிய நாள்களில் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன. அதன்படி,
திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் விவரம்: முதல் பரிசு சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவி வா.ராஜேஸ்வரி, இரண்டாம் பரிசு சின்னாளப்பட்டி, கலிக்கம்பட்டி சேரன் வித்யாலயா பதின்ம மேல்நிலைப்பள்ளி மேல்நிலை முதலாமாண்டு மாணவி இரா.மோத்திகாஸ்ரீ, மூன்றாம் பரிசு திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் ரா.கிஷோர், சிறப்பு பரிசு(2 நபர்கள்) திண்டுக்கல் நேருஜி நினைவ நகரவை மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவர் மு.முகம்மதுஷமில், திண்டுக்கல் முருகன்பட்டி அரசு(ஆ.தி.ந.) மேல்நிலைப்பள்ளி மேல்நிலை இரண்டாம் ஆண்டு மாணவர் ரா.ஹரிஹரன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள் விவரம்: முதல் பரிசு திண்டுக்கல் ஜிடிஎன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி ஜோ.கேத்ரின் மெர்லினா, இரண்டாம் பரிசு திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவி ந.சிவப்பிரியா, திண்டுக்கல் புனித அந்தோணியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி சி.மெர்சி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியர்கள் விவரம்: முதல் பரிசு கை.சொர்ணதர்ஷினி, பதினொன்றாம் வகுப்பு, அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். இரண்டாம் பரிசு பா.கோகுலகண்ணன் பன்னிரெண்டாம் வகுப்பு, எம்.எஸ்.பி.சோலைநாடார் ஆண்கள மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல். மூன்றாம் பரிசு ப.சாதனா, பதினொன்றாம் வகுப்பு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர். சிறப்பு பரிசு(2 நபர்கள்) ம.மதன்குமார், பன்னிரெண்டாம் வகுப்பு, துரைகமலம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, நத்தம்- கோவில்பட்டி மற்றும் ப.விமல்சாஸ்தா, பன்னிரெண்டாம் வகுப்பு – அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேடசந்தூர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்கள் விவரம்: முதல் பரிசு மோ.நாகஅர்ஜீன், இளங்கலை (மூன்றாம்ஆண்டு) அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழநி. இரண்டாம்பரிசு ஜோ.கேத்ரின்மெர்லினா, இளங்கலை (மூன்றாம் ஆண்டு) ஜி.டி.என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி திண்டுக்கல். மூன்றாம்பரிசு ம.அமுதப்பிரியா, இளங்கலை (மூன்றாம் ஆண்டு) சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஒட்டன்சத்திரம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 மற்றும் சிறப்பு பரிசாக ரூ.2,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன், உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.