Tamilvalarchi Tamil Act

செ.வெ.எண்:-14/2025
நாள்:-05.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அனைத்துத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 04.03.2025 மற்றும் 05.03.2025 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.
அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கத்தில் சிறந்த வல்லுநர்களை கொண்டு பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
2022-ஆம் ஆண்டிற்கு தமிழில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயம் மற்றும் சான்றிதழ், தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய அரசு பணியாளர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து பணியாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி ஜ.சபீர்பானு மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.