Close

Tamilvalarchi – Thirukural

Publish Date : 10/01/2022
.

செ.வெ.எண்:-26/2022

நாள்:10.01.2022

திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் 5 மாணாக்கர்களுக்கு வழங்கி பாராட்டினார்கள்.

தமிழ் வளர்ச்சித் துறைக்கான 2021-22-ஆம் ஆண்டு மானியக்கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க 1,330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 219 மாணவர்களுக்கு குறள் பரிசு வழங்கிட தமிழக அரசால் ஆணை பிறப்பிக்கப்பெற்றது. இதனைத் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 9 மாணவர்களுக்கு மட்டும் 10.12.2021 அன்று தலைமைச் செயலகத்தில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன. திருக்குறள் முற்றோதல் செய்த ஏனைய மாணவர்களுக்கு குறள் பரிசுத் தொகையினை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வாயிலாக வழங்கிட அறிவிக்கப்பெற்றது.

இவ்வறிவிப்பினை செயல்படுத்துமுகமாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(10.01.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையால் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்ட மு.யோகேஸ் கிருஷ்ணன், 4-ஆம் வகுப்பு, இராம்சன்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, நத்தம், செ.சிபி சக்கரவர்த்தி, 9-ஆம் வகுப்பு, அன்னை வேளாங்கண்ணி ஆங்கில மேல்நிலைப்பள்ளி, வத்தலக்குண்டு, இர.அக்ஷதா, 6-ஆம் வகுப்பு, பிக்ட்ரீமர்ஸ் அகாடமி பசும்பொன் நகர், சே.வி.ஆருத்திரா 2-ஆம் வகுப்பு, பிக்ட்ரீமர்ஸ் அகாடமி பசும்பொன் நகர், திண்டுக்கல் மாவட்டம், ரா.தனலெட்சுமி, 8-ஆம் வகுப்பு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நத்தம் ஆகிய 5 மாணாக்கர்களுக்கு, தலா ரூ.10,000 பரிசுத்தொகை, பாராட்டுச்சான்றிதழ், நூல் பரிசு, அரசு ஆணையுடன் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன் மற்றும் அலுவலர்கள் திருமதி இராசலட்சுமி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.