Close

Tamilvalarchi -Thirukural

Publish Date : 06/12/2021
.

செ.வெ.எண்:-14/2021

நாள்:06.12.2021

1,330 குறட்பாக்களையும் விடுபாடின்றித் தெளிவாக ஒப்புவித்த மாணவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்கள்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் இன்று(06.12.2021) திருக்குறள் முற்றோதல் நேராய்வு நடைபெற்றது.

இந்நேராய்வில் பலந்துகொண்ட மாணவ, மாணவிகளில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆறாம் வகுப்பு மாணவி ரா.ரமா, நத்தம் வட்டம், இராம்சன்ஸ் பதின்ம மேனிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி பி.மோகனப்பிரியா, நத்தம் வட்டம் இராம்சன்ஸ் மழழையர் (ம) தொடக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி ரா.பிரேமா மற்றும் ஒட்டன்சத்திரம் வட்டம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நான்காம் வகுப்பு பயின்று வரும் மாணவி தி.அன்புமதி ஆகியோர் 1,330 குறட்பாக்களையும் விடுபாடின்றித் தெளிவாக ஒப்புவித்தார்கள். திருக்குறள் தொடர்பாக கேட்கப்பட்ட அனைத்து வினாக்களுக்கும் சரியாக விடையளித்தார்கள்.

மாணவிகளின் திருக்குறள் முற்றோதல் திறன் சிறப்பாக இருந்தது. அரசின் திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசைப் பெற இவர்கள் தகுதியானவர்கள் என மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து. இந்த மாணவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் பாராட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.எஸ்.பிரபு, இ.வ.ப., மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் முனைவர் ப.நாகராசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.சீ.கருப்புச்சாமி உட்பட துறை அலுவலர்கள் பலர் உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.