Close

Tamilvalarchi

Publish Date : 15/02/2022

செ.வெ.எண்:-30/2022

நாள்:15.02.2022

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 03.03.2022 மற்றும் 04..03.2022 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்துத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு 03.03.2022 மற்றும் 04.03.2022 ஆகிய நாள்களில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் – கருத்தரங்கம் நடத்துதல் அரசு அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் விரைவாகவும், முழுமையாகவும் நடைபெறத் துணைபுரியும் வகையில் மாவட்டந்தோறும் உள்ள அனைத்துத்துறை அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு 2021-22-ஆம் நிதியாண்டில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடத்திட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க தீநுண்மி(கொரோனா) நோய்த்தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் 03.03.2022 மற்றும் 04..03.2022 ஆகிய இரண்டு நாள்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகக் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளன. இப்பயிலரங்கில் மாவட்ட ஆட்சியர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழறிஞர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றவுள்ளனர்.

இப்பயிலரங்கு-கருத்தரங்கில் ஒவ்வொரு அலுவலகத்திலிருந்தும் அலுவலர் நிலையில் அலுவலர்(அ) கண்காணிப்பாளர் ஒருவரும், பணியாளர் நிலையில் உதவியாளர் (அ)இளநிலை உதவியாளர் (அ) தட்டச்சர் ஒருவருமாக மொத்தம் இருவர் கலந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.