Close

Tasmac closed

Publish Date : 14/02/2022

செ.வெ.எண்:-24/2022

நாள்:14.02.2022

திண்டுக்கல் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் – 2022 வாக்குப்பதிவு 19.02.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதை முன்னிட்டு, 17.02.2022 (வியாழக்கிழமை) காலை 10.00 மணி முதல் 19.02.2022 (சனிக்கிழமை) நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.02.2022 (செவ்வாய் கிழமை) ஆகிய தினங்களில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் – 2022 நடைபெறக் கூடிய பகுதிகள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளில் இருந்து 5-கி.மீட்டர் சுற்றளவிற்குட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அருகில் அமைந்துள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக் கூடங்கள் (எப்.எல்.1) மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) மூடப்பட்டிருக்கும்

மேலும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் சுற்று வட்டாரத்திற்குட்பட்ட 5-கி.மீட்டர் சுற்றளவிற்குள் அமைந்துள்ள பகுதிகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அதனை அப்பகுதியில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் விதியை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.