Close

TASMAC Shop and FL License bar- Closed

Publish Date : 29/03/2021

செ.வெ.எண்:-40/2021

நாள்:- 29.03.2021

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கி வரும் ஐ.எப்.எம்.எல்., மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மர்க் எப் எல் -1 கடைகள்) மற்றும் மதுபான கூடங்கள் மற்றும் எப்.எல்.2 முதல் எப்.எல்.11 வரை (எப்.எல்.6 தவிர) அனைத்து மதுபான உரிமத்தலங்கள், தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021 வாக்குப்பதிவு நாளான 06.04.2021 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 02.05.2021 ஆகிய நாட்களில் நடைபெறுவதை முன்னிட்டு, 04.04.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 06.04.2021 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.00 மணி வரை மற்றும் 02.05.2021 ஞாயிற்றுக்கிழமை – வாக்கு எண்ணிக்கை நாள் ஆகிய நாட்களில் திறக்காமல் உரிமத்தலங்களின் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அன்றைய நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. அன்றைய தினங்களில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.