Close

TCP

Publish Date : 28/07/2022

செ.வெ.எண்:-85/2022

நாள்:28.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையின் இசைவு வழங்கும் திட்டத்தில் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க 01.07.2022 முதல் கூடுதலாக 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகர் ஊரமைப்புத்துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண் 76, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.(3)) துறை நாள் 14.06.2018-ல் வெளியிடப்பட்டன.

இத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை(Online)-ல் 14.06.2018 முதல் 13.09.2018 வரை மற்றும் 22.03.2021 முதல் 04.04.2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவர்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி இசைவு பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் Online-ல் விண்ணப்பிக்க www.tn.gov.in/tcp-என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 01.07.2022 முதல் கூடுதலாக 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமர்ப்பித்து இசைவு பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.