Close

Thadicombu – Thooimai Awarness Meeting

Publish Date : 06/06/2022

செ.வெ.எண்:-12/2022

நாள்:03.06.2022

திண்டுக்கல் மாவட்டம்

தாடிக்கொம்பு பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம், தீவிர தூய்மைப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’, ‘எனது குப்பை எனது பொறுப்பு’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி, நகர பசுமை, தூய்மைக்கு மரக்கன்றுகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம, தாடிக்கொம்பு பேரூராட்சியில் இன்று(03.06.2022) ‘நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’, ‘எனது குப்பை எனது பொறுப்பு’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் கலந்துகொண்டு, உறுதிமொழி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கடை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள், தாடிக்கொம்பு பேரூராட்சி செயல் அலுவலர் திரு.சிவக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் திரு.நாகப்பன், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.