Close

Thadicombu Town Panchayat Photo Exhibition

Publish Date : 17/06/2019
tp1

செ.வெ.எண்:-25/2019 நாள்:17.06.2019

tp2

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

இக்கண்காட்சியில், தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களான விலையில்லா அரிசி, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, விலையில்லா கறவைமாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், 10, 12ஆம் வகுப்பு படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவிடன் கூடிய தாலிக்கு 8 கிராம் தங்கம், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், வண்ணபென்சில்கள், சீருடைகள், காலணிகள், ஜாமின்ட்ரி பாக்ஸ், விலையில்லா மிதிவண்டி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள். மேலும், உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நிதிஉதவி, முதலமைச்சரின் விரிவானமருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் மற்றும்; மாண்புமிகு தமிழக முதலமைச்சர் முதல் கையெழுத்தாக பெண்கள் 2 சக்கர வாகனம் வாங்க 50 % மானியம், மீனவர்களுக்கு 1.70 இலட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் வீடுகள், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை இருமடங்கு உயர்வு, 500 மதுக்கடைகள் மூடல் என முத்தான ஐந்து திட்டங்களுக்கு கையெழுத்திட்டு ஆணை பிறப்பித்துள்ள திட்டங்கள் தொடர்பான புகைப்படங்களும் இக்கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆகியோர் விவசாய பெருமக்களுக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்கியது தொடர்பாகவும் மற்றும் நீர்நிலைகளின் மறு சீரமைக்கும் பணியான குடிமராமத்து பணிகள் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் கஜா புயல் நிவாரண பணிகள், மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்டவைகள் தொடர்பாக புகைப்படங்கள் இடம் பெற்று, பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், திண்டுக்கல்