Close

THANTHAI PERIYAR AWARD

Publish Date : 24/08/2020

செ.வெ.எண்:-21/2020 நாள்:- 22.08.2020

திண்டுக்கல் மாவட்டம்

“சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவோருக்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

2020-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிபரம் மற்றும் முழு முகவரியுடன் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் 31.10.2020-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.