Close

THCM-VC-Paddy Direct Purchase Goodown

Publish Date : 09/05/2023
.

செ.வெ.எண்:-37/2023

நாள்:-25.04.2023

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மொத்தம் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கிடங்குகள் அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

கொடைக்கானலில் கூடுதலாக உணவுப் பொருட்களை பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் 750 மெ.டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கையும் திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை – தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 9 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கிடங்குகள் அமைப்பதற்கான பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(25.04.2023) சென்னையிலிருந்து காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், கொடைக்கானலில் கூடுதலாக உணவுப் பொருட்களை பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் 750 மெ.டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கையும் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதற்கும், அதனை பாதுகாப்பதற்கும், பல்வேறு பணிகள் போர்கால அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ரூ.50 கோடி மதிப்பில் 80 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்ட தமிழக அரசு சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டு அதன் முதற்கட்டமாக 63 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதில் திண்டுக்கல் மாவட்டத்தில், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் ஆத்துார் மற்றும் சித்தரேவு ஆகிய இடங்களிலும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் விளாம்பட்டி மற்றும் மட்டப்பாறை ஆகிய இடங்களிலும், பழனி சட்டமன்ற தொகுதியில் கீரனுார், அ.கலையம்பத்துார், பெரியம்மாபட்டி, கோவில்லாமபட்டி மற்றும் அக்கரைப்பட்டி ஆகிய இடங்களிலும் என மொத்தம் 9 இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் தலா ரூ.62.50 இலட்சம் மதிப்பீட்டில் மொத்தம் ரூ.5.63 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும், கொடைக்கானலில் கூடுதலாக உணவுப் பொருட்களை பாதுகாக்க ரூ.2 கோடி மதிப்பீட்டில் 750 மெ.டன் கொள்ளளவு கொண்ட வட்ட செயல்முறை கிடங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், ஆத்துாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் திண்டுக்கல் மண்டல மேலாளர் திருமதி ரா.மெர்லின்பாரதி, துணை மண்டல மேலாளர் திரு.கு.நலவழுதி, கொள்முதல் நிலைய அலுவலர் திரு.கே.என்.பாலன், உதவிப் பொறியாளர் திரு.சந்திரபோஸ் உட்பட அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.