Close

The deadline for submitting works for the National Voter Awareness Contest has been extended to 31.03.2022

Publish Date : 21/03/2022

செ.வெ.எண்:-38/2022

நாள்:21.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம், 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது –மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிக்கு படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம், 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வினாடி-வினா, காணொலிக்காட்சி தயாரிப்பு, பாட்டுப்போட்டி, விளம்பரப் பட வடிவமைப்பு, வாசகம் எழுதுதல் என பல்வேறு தலைப்புகளில் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் வாக்காளர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் பதிவுகளை விளம்பரப்படம், காணொளிக் காட்சி, பாடல்கள், வாசகங்கள் போன்ற வடிவங்களில் voter-contest@eci.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பலாம். சிறந்த பதிவுகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இப்போட்டியில் கலந்து கொள்வதற்கான கடைசி நாள் 31.03.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு https://ecisveep.nic.in/contest/ என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.