Close

The Hon’ble CM announcement for Dindigul Disrtict

Publish Date : 16/07/2019

செ.வெ.எண்:-45/2019 நாள்:15.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை மானியக்கோரிக்கையில் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் திண்டுக்கல் மாவட்டத்திற்கான அறிவிப்புகள்.

• திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலைச் சுற்றி உள்ள வையாபுரி மற்றும் சிறுநாயக்கன் குளங்களை புனரமைத்து, நீர்நிலைகளுக்கு வந்து சேரும் கழிவுநீர் கால்வாய்களை புனரமைத்து, 2 சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி ரூபாய் 51 கோடியே 85 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

• திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், பாளையம் கிராமத்தில், விராலிப்பட்டி குக்கிராமத்தில் உள்ள கசிவு நீர் குட்டையை புனரமைக்கும் பணி ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

• திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், ஆயக்குடி கிராமம் வரதமாநதி அணை வெள்ள நீரினை ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டி கருங்குளத்திற்கு கொண்டு சேர்க்கும் பணி ரூபாய் 60 கோடி மதிப்பீட்டிலும் மேற்கொள்ளப்படும்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.