Close

The Hon’ble CM announcement in Assembly

Publish Date : 22/07/2019

செ.வெ.எண்:60/2019 நாள்:19.07.2019

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி எண் 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை.

மக்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு மாண்புமிகு அம்மாவின் அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகின்றது. ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுகிறது. விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகளை தீர்வு காண்பதற்கான சிறப்பு குறை தீர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேற்படி குறைதீர் நிகழ்வுகளில் பட்டா மாற்றம், சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் முதியோர் ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம், இலவச வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் ஒரு சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை மாண்புமிகு அம்மாவின் அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் நகரங்களில் வார்டுகளிலும், கிராமங்கள்தோறும் நேரடியாக சென்று மனுக்களை பெற்று, தீர்வு காண, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தை ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி ஒரு குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறைஃ நகர்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச்

சார்ந்த ஒரு அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெறுவார்கள். இம்மனுக்கள் அனைத்தும் கணினியில் பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பப்படும். அம்மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும்.

மேற்குறிப்பிட்ட மனுக்களின் மீதான தீர்விற்குப் பின், செப்டம்பர் மாதத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும். பல்வேறு நலத்திட்டப்பயன்களை இவ்விழாவில் வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளான சாலைகள், தெரு விளக்குகள், மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அடிப்படை தேவைகளுக்கும் இவ்விழாவின்போது தீர்வு காணப்படும். மக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் மாநில அரசின் முக்கியமான சிறப்புத் திட்டமாக இத்திட்டம் திகழும்.

இந்த சிறப்புத் திட்டத்தை செம்;மையாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வட்டத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 76 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.

இவ்வாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.