Close

The Hon’ble CM Arrival -Collector Meeting

Publish Date : 21/04/2022
.

செ.வெ.எண்:-54/2022

நாள்:20.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் வருகை தரவுள்ளார்கள் -முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(20.04.2022) துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்; ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். திண்டுக்கல்லில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட வேண்டிய முடிவுற்ற திட்டப்பணிகள் பட்டியல், அடிக்கல் நாட்டப்பட வேண்டிய ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய திட்டப்பணிகள் பட்டியல் ஆகியவற்றை விரைந்து தயாரித்து, அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும ஊராட்சித்துறை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரக புத்தாக்கத்திட்டம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் விபரம் மற்றும் பயனாளிகள் பட்டியல் ஆகியவற்றை விரைந்து தாயாரித்து பணிகளை முடிக்க வேண்டும். விழாவில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். இந்த விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் இணைந்து விரைவாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, விழா நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அங்கிங்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விழா மேடை அமைவிடம், நுழைவு வாயில், பொதுமக்கள் அமரும் இடம். பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(20.04.2022) துறை அலுவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் திரு.நா.சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.இரா.அமர்நாத், மாவட்ட வன அலுவலர் திரு.செ.பிரபு, இ.வ.ப., திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.ச.முருகேசன் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.