The Hon’ble CM arrival -The Hon’ble ministers Inspection

செ.வெ.எண்:-80/2022
நாள்:28.04.2022
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் வருகை தரவுள்ளார்கள் – மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக விழா நடைபெறவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக விழா நடைபெறவுள்ள திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று(28.04.2022) மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்; ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர். விழா நடைபெறும் இடத்தில் மேடை பணிகள், நுழைவு வாயில், அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் அமரும் இடம், பொதுமக்கள் அமரும் இடம். பாதுகாப்பு அம்சங்கள், திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்பம்சங்கள் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும அரங்குகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள், தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30.04.2022 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 50,000 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.
கல்வி, குடிநீர் சுகாதாரம் என தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் கல்வி மேம்பாட்டுக்காக திண்டுக்கல், பழனி மற்றும் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் மகளில் கல்லூரிகள் கடந்த கழக ஆட்சிகாலத்தில்தான் கொண்டுவரப்பட்டன. இந்தக் கல்லூரிகளில் தற்போது ஏராளமான மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள் உயல்கல்வி படிப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற 11 மாதங்களில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 5 கல்லூரிகள் கிடைத்துள்ளன. இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, செய்தி மக்கள் தொடர்புத்துறை மண்டல இணை இயக்குநர் திரு.ம.வெற்றிச்செல்வன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.மாதவன், சிறுமலை வன உரிமை குழு தலைவர் திரு.நெடுஞ்செழியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.