Close

The Hon’ble CM arrival -The Hon’ble ministers Inspection

Publish Date : 25/04/2022
.

செ.வெ.எண்:-65/2022

நாள்:23.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் வருகை தரவுள்ளார்கள் -மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள்,மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அரா.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக விழா நடைபெறவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக விழா நடைபெறவுள்ள திண்டுக்கல் அங்கிங்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று(23.04.2022) மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அரா.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.விழா நடைபெறும் இடத்தில் மேடை அமைவிடம், நுழைவு வாயில், அரசு நலத்திட்ட உதவிகள் பெறும் பயனாளிகள் அமரும் இடம், பொதுமக்கள் அமரும் இடம். பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வுக்குப்பின்னர், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் சிறப்பான மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.04.2022 அன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். திண்டுக்கல் அங்கிங்கு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 30.04.2022 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு, மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சுமார் 50,000-க்கும் அதிகமான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்கள்.திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சிப்பணிகள் என அரசின் அனைத்துத் திட்டங்களும் சரிசமமாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற 11 மாதங்களில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு 5 கல்லூரிகள் கிடைத்துள்ளன. ஆத்தூர், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள், பழனியில் சித்தா கல்லூரி, கொடைக்கானலில் கூட்டுறவு பயிற்சி மையம் ஆகிய 5 கல்லூரிகள் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்துள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் சட்டமன்ற தொகுதி தவிர அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அரசு கல்லூரிகள் உள்ளன. நத்தம் சட்டமன்ற தொகுதியிலும் விரையில் அரசு கல்லூரி கொண்டுவரப்படும். இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திரு.இரா.அமர்நாத், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.மாதவன், சிறுமலை வன உரிமை குழு தலைவர் திரு.நெடுஞ்செழியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.