Close

The Hon’ble CM – VC – Food and Civil Supply Minister – College (Natham)

Publish Date : 27/05/2025
.

செ.வெ.எண்:-74/2025

நாள்:-26.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை தொடங்கி வைத்தார்.

நத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி புதிய வகுப்புகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து உயர்கல்வித்துறையின் சார்பில் நத்தத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பங்கேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நத்தத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் உயர்கல்வியின் துறையின் சார்பில் அரசு மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கி வைத்துள்ளார். நத்தத்தில் அதிகளவில் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்றால் வெளியூர் செல்ல வேண்டிய நிலை இருந்தது. தற்போது, இக்கல்லூரியின் மூலம் இப்பகுதி மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி படிக்க ஏதுவாக அமைந்துள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூரில் 2 அரசு கலைக்கல்லூரியும், ஒட்டன்சத்திரத்தில் 2 அரசு கலைக்கல்லூரியும், நத்தத்தில் 1 அரசு கலைக்கல்லூரியும், ஒட்டன்சத்திரத்தில் 1 தொழிற்பயிற்சி நிலையம், குஜிலியம்பாறையில் 1 தொழிற்பயிற்சி நிலையம், பழனியில் 1 சித்தா கல்லூரியும், கொடைக்கானில் கூட்டுறவுத்துறையின் சார்பில் ஒரு கூட்டுறவு பயிற்சி இணையம் என தமிழ்நாட்டிலேயே திண்டுக்கல் மாவட்டத்தில் தான் 9 கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு கடந்த 48 மாத ஆட்சியில் 9 கல்லூரிகள் அமைத்து கொடுத்தவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலசை்சர் அவர்கள்.எனவே, நாம் கேட்ட கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார்.

விரைவில் குஜிலியம்பாறை, நத்தம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளில் புதியதாக கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு 110 விதியின்படி, திண்டுக்கல் மாவட்டத்திற்கு நத்தத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, இக்கல்லூரியில் 5 பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நத்தம் கே.எஸ்.எஸ் முகமது யூசூப் அவர்களின் நினைவாக, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்காந்தர் பாட்ஷா அவர்களின் குடும்பத்தினர் 5 ஏக்கர் நிலத்தினை இக்கல்லூரி கட்டுவதற்கு தானமாக வழங்கி உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமானவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு பள்ளிக்கல்வித்துறைக்காக ரூ.44,000 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.8,000 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.

பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை சுமார் 54 சதவீதம் உயர்ந்துள்ளது.

நான் முதல்வன் திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற 55 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மேலும், தகுதியான நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாயம் மற்றும் விவசாயிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2 இலட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்க அறிவிக்கப்பட்டதில், இதுவரை 1.70 இலட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 48 மாதங்களில் 2,600 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 260 கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 86 புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

விரைவில் லிங்கவாடி மற்றும் முளையூர் பகுதிகளுக்கு தார்சாலை, நியாயவிலைக்கடை அமைக்கப்படும்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, கடந்த ஆண்டு ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் ஒரு இலட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகின்றன. ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கியவர்களுக்கு அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் 48 மணி நேரத்திற்கு ஏற்படும் மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு நபருக்கு ரூ.2 இலட்சம் மதிப்பில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆண்டி அம்பலம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், கல்லூரி கல்வி இயக்குநர் திரு.எஸ்.குணசேகரன், கல்லூரி முதல்வர் முனைவர் திரு.ராஜாராம், நத்தம் பேரூராட்சி தலைவர் திரு.சேக் சிக்காந்தர் பாட்ஷா, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.