The Hon’ble CM -VC Food and Civil Supply Ministers – Housing board – Oddanchatram

செ.வெ.எண்:-67/2025
நாள்:-29.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் 480 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.66.23 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சி பகுதியில் 432 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.57.04 கோடி மதிப்பீட்டிலும், அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்க சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனுார் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக இன்று(29.01.2025) தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 ஜி பிளஸ் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.66.23 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சி அண்ணாநகரில் 432 குடியிருப்புகள் ரூ.57.04 கோடி மதிப்பீட்டிலும் என இரு திட்டங்களும், இராதாபுரத்தில் 2 பேரூராட்சிகளிலும், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் என 5 இடங்களில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் சார்பில் குடிசையில் வாழ்கின்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட வேண்டும் என்பதற்காக நிதிகளை ஒதுக்கி அத்திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்துள்ளார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என கூறுவார்கள். அதுபோல் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஏழையின் சிரிப்பில் பேரறிஞர் அண்ணாவை காணலாம் என சொல்வார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழையின் சிரிப்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை காணலாம் என சொல்வார். அந்த வகையில் எல்லோர்க்கும் எல்லாம் என்ற வகையில் ஒரு சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 480 ஜி பிளஸ் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.66.23 கோடி மதிப்பீட்டிலும், கீரனூர் பேரூராட்சி அண்ணாநகரில் 432 குடியிருப்புகள் ரூ.57.04 கோடி மதிப்பீட்டில் என மொத்தம் 912 குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, வீட்டின் உரிமையாளர்களுக்கு குடியிருப்பு சாவிகள் ஒப்படைக்கப்படும்.
மேலும், பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கும் விரைவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தற்போது கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய ரூ.20.00 கோடி மதிப்பீட்டில் நடைபாதை, கழிப்பறை, மின் வசதிகள், விளையாட்டு மைதானம், நியாயவிலைக்கடை ஆகிய அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் கீரனூர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் வரும் ஏப்ரல் மாத்திற்குள் ஒரு நபருக்கு 135 லிட்டர் குடிநீர் தினந்தோறும் வருகின்ற வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாக வழங்கப்படும்.
மேலும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் சாலை பணிகள், கழிவு நீர் வாய்க்கால் பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஒட்டன்சத்திரம் நகராட்சியை குப்பையில்லா நகராட்சியாக மாற்றுவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுபோல் எண்ணற்ற பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப“பொறுப்பேற்று செய்துள்ளார்கள். மேலும், விடியல் பயணம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைபெண் திட்டம், காலை உணவு திட்டம், தமிழ்புதல்வன், சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 பவுனுக்கு குறைவாக நகைக்கடன் தள்ளுபடி, பெண்கள் சுய உதவிக்குழு கடன் ரூ.12 இலட்சத்திலிருந்து ரூ.40 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. ஒட்டன்சத்திரத்தில் பேருந்து நிலையத்தில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் நகரும் நடை மேம்பாலம் கட்டப்படவுள்ளது. அம்பிளிக்கையில் பெண்கள் படிக்கின்ற கல்லூரி செயல்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் ரூ.7.00 கோடி மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், தமிழக அரசுக்கும் மாவட்ட மக்கள் என்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் நகராட்சித் தலைவர் திரு.க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் திரு.ப.வெள்ளைச்சாமி, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் உதவி நிர்வாகப் பொறியாளர் திருமதி ஈஸ்வரி, ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையாளர் திருமதி சுவேதா, ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.காமராஜ், திரு.வடிவேல், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.