Close

The Hon’ble Co-op Minister Function (Bus Route)

Publish Date : 12/11/2021
.

..

செ.வெ.எண்:-23/2021

நாள்:11.11.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிட், திண்டுக்கல் மண்டலம் புதிய வழித்தட பேருந்து சேவை, வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் இன்று (11.11.2021) தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்(மதுரை)லிட், திண்டுக்கல் மண்டலம் புதிய வழித்தட பேருந்து சேவை, வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவையை ரெட்டியார்சத்திரத்தில் துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று, தமிழக மக்களுக்கு அல்லும் பகலும், அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அறிவிக்காத பல அறிவிப்புகளை அறிவித்து, அத்திட்டங்கள் பலன்கள் அனைத்தையும் கிராமப்புறத்தில் வாழும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில், சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்கள். குறிப்பாக தேர்தல் நேரத்தில் தாம் அறிவித்த வாக்குறுதிகளையும், தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார்கள்.

சென்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கூற்றின்படி தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழியில், தமிழக கூட்டுறவுத்துறையை சீர்மிகு துறையாக மாற்றப்பட்டு வருகிறது. கடந்த தி.மு.க ஆட்சியில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியப் பகுதியில் ஏழை, எளிய மக்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், பள்ளி மாணவர்கள் வசதிக்காக தொடங்கப்பட்ட 11-க்கும் மேற்பட்ட பேருந்து வழித்தடங்களை, அ.தி.மு.க அரசு நிறுத்திவிட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில், ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து கொடுப்பேன் என தேர்தல் பிரச்சாரத்தின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (11.11.2021) முதல், திண்டுக்கல் முதல் நிலக்கோட்டை வரை வழி, பஞ்சம்பட்டி, சின்னாளபட்டி, செம்பட்டி வரை செல்லக்கூடிய பேருந்தும், திண்டுக்கல் முதல் குழிப்பட்டி, சட்டையப்பனூர் வரையிலும், திண்டுக்கல் முதல் வேடசந்தூர் வழியாக செல்லும் பேருந்துகள், புதுக்கோட்டை, கரட்டுப்பட்டி, சுள்ளெறும்பு வழியாகவும், திண்டுக்கல்லிருந்து அழகுபட்டி, முத்தனம்பட்டி, சில்வார்பட்டி, தெப்பக்குளத்துப்பட்டி வரை பள்ளிக் குழந்தைகளுக்காகவும், ஒட்டன்சத்திரம் முதல் வேடசந்தூர் வரை செல்லும் பேருந்து புதுச்சத்திரம், நடுப்பட்டி, சட்டையப்பனூர் வழியாகவும், இதுபோல திண்டுக்கல் முதல் ஒட்டன்சத்திரம் வரை செல்லும் பேருந்துகள் ரெட்டியார்சத்திரம், எல்லைப்பட்டி, கட்டசின்னான்பட்டி வழியாகவும், திண்டுக்கல்லிலிருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் பேருந்துகள் அனுமந்தராயன்கோட்டை, தெற்கு மேட்டுப்பட்டி, தருமத்துபட்டி வழியாகவும்,

திண்டுக்கல்லிருந்து பண்ணைப்பட்டி செல்லும் பேருந்துகள் சந்தமநாயக்கன்பட்டி, எல்லைப்பட்டி, கருப்பிமடம் வழியாகவும், திண்டுக்கல்லிலிருந்து தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில் செல்லும் வாகனங்கள் எல்லைப்பட்டி, முத்தனம்பட்டி வழியாகவும், திண்டுக்கல்லிருந்து கன்னிவாடி செல்லும் நகரப் பேருந்துகள் முத்தனம்பட்டி, அம்மாபட்டி, நடுப்பட்டி, மாங்கரை, வீரப்புடையான்பட்டி, மணியக்காரன்பட்டி வழியாகவும் செல்ல உள்ளது.

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தி.மு.க ஆட்சியில் 2010-ல் தொடங்கப்பட்ட இந்த பேருந்து வசதிகள் 2011-ல் நிறுத்தப்பட்டன. இதனால் பள்ளி மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் கடும் அவதிப்பட்டனர். அவர்களின் இன்னலை போக்கும் வகையில், தற்போது மீண்டும் இந்த பேருந்து வசதிகள் தொடங்கப்பட உள்ளது. இதை ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிட், திண்டுக்கல் மண்டலம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 8 கிளைகள் மூலம் நகரப் பேருந்துகள் 204-ம், புறநகர் பேருந்துகள் 176-ம், மலைப் பேருந்துகள் 38-ம் என மொத்தம் 418 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. மேற்படி 204 நகரப் பேருந்துகள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 109701 பயணிகள் பயணம் செய்கிறார்கள். அதில் 108682 பயணிகள் மகளிர் இலவச பயணம், 951 பயணிகள் மாற்றுதிறனாளிகள், 30 பயணிகள் திருநங்கைகள், 25 பயணிகள் தமிழ்மொழி காவலர்கள், 25 பயணிகள் சுதந்திர போராட்ட தியாகிகள் ஆகியோர்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.

மேலும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள முக்கிய வழிப்பாட்டு தலங்களான பழனி தைப்பூசத் திருவிழா, பங்குனி உத்திர திருவிழா, சென்றாயப்பெருமாள் கோவில் திருவிழா, கோபிநாதசாமி திருக்கோவில், அகரம், ஸ்ரீமுத்தாளம்மன் திருக்கோவில், அனைப்பட்டி ஆஞ்சனேயர் திருக்கோவில், தெத்துப்பட்டி ராஜகாளி அம்மன் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களின் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் பக்தர்களின் கூட்ட தேவைக்கேற்ப சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் இந்தியாவில் தனியார் மையமாக இருந்த பேருந்துகளை தேசியமயமாக்கி, ஏழை, எளிய மக்கள், குறைந்த, ஒரே கட்டணத்தில், பயணம் செய்வதற்கு ஏதுவாக சட்டத்தை கொண்டு வந்தார்கள். பேருந்துகள் நஷடத்தில் இயங்கிய போதும், பணியாளர்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்கள். முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். எனவே, பொதுமக்களுக்கு பல நன்மைகளை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களையும் இணைக்கின்ற அளவிற்கு சாலை வசதிகளை மேம்படுத்தி, பள்ளி நேரத்திற்கும், நகரத்தினை நோக்கி, வேலைக்கு செல்ல பேருந்து வசதிகளை செய்து கொண்டுக்கப்படும்.

ஆட்சிக்கு வந்து 5 மாத காலத்தில், கொரோனாவை வீழ்த்துவதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எடுத்த நடவடிக்கை உலக அளவில் சிறந்த முதலமைச்சர் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள். சென்னையில் மழை வெள்ளத்தில் உள்ள மக்களை காப்பாற்றுகின்ற பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். வரலாற்றில் இல்லாத அளவிற்கு விவசாய கடன் 5 பவுன் நகைக்கு கீழே வைத்துள்ள விவசாயிகளுக்கு நகை திரும்பி தருவதற்கு பணிகள் நடைபெற்று வருகிறது. சுயஉதவிக்குழுவிற்கு 2761 கோடி கூட்டுறவுத்துறையின்; மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் வழங்கி உள்ளார்கள். நகைக்கடன் தள்ளுபடி என்பது இந்திய அரசில் சரித்திரத்தில் முதன்முதலாக சென்னதை செய்தவர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள். மக்களுக்காக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும், தொடர்ச்சியாக, நிறைவேற்றி வருகிறார்கள். கூட்டுறவுத்துறையில் வெளிப்படை தன்மையோடு, விற்பனையாளர்கள், உதவியாளர்கள், வங்கிகளில் பணியாற்றும் பணியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வுகள் வைக்கப்பட்டு, வெளிப்படை தன்மையுடன் 4000 இடங்களை விரைவில் நிரப்பப்படும். இந்த கூட்டுறவு பயிற்சி மையம், கழக ஆட்சிகாலத்தில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டது. கடந்த ஆட்சிகாலத்தில் 170 நபர்களுக்குதான் சேர்க்கை இருந்தது. ஆனால் தற்போது 625 நபர்களுக்கு சேர்க்கை விகிதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. படித்தால் வேலை நிச்சயம் வேலை வீடு தேடி வரும். நாம் அரசு வேலைக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. நமது தொகுதிக்கு 2 கல்லூரிகள் வேண்டும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. என்று அதில் கூட்டுறவுத்துறையின் மூலம் 1 கல்லூரி இந்தாண்டு துவங்கி கொள்ள அனுமதி அளித்துள்ளார்கள். விரைவில், ரெட்டியார்சத்திரம் பகுதியில் கல்லூரி துவக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னிவாடியில் 6 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைப்பதற்காக விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர், மதுரை கோட்டம் திரு.பி.திருவாம்பலம்பிள்ளை, மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் திருமதி. சுப்புலட்சுமி சண்முகவேல், ஆத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.மகேஸ்வரி முருகேசன், ஒன்றிய துணை பெருந்தலைவர் திருமதி.ஹேமலதா மணிகண்டன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.மகேஸ்வரி முருகேசன், பொது மேலாளர்(திண்டுக்கல் மண்டலம்) திரு.ஆர்.சிவலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.