Close

The Hon’ble Co op minister Function (DCM)

Publish Date : 11/11/2021
.

.

செ.வெ.எண்:-24/2021

நாள்:11.11.2021

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், 2021-22ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள் முன்னிலையில் இன்று (11.11.2021) PSNA பொறியியல் கல்லூரியில் 2021-22ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

கடந்தாண்டில் தமிழகம் முழுவதும் கூட்டுறவு பட்டய படிப்பிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை 3500 இருந்தது. ஆனால் நடப்பாண்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், 9500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கூட்டுறவு பட்டய படிப்பில் பயில உள்ளார்கள். பல்வேறு மாணவ, மாணவியர்கள் 12-ம் வகுப்பு பயின்ற உடன், பொறியியல் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை நாடி செல்கிறார்கள். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றவுடன், உங்களுக்குறிய வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைத்திட, அனைத்திலும் வெளிப்படை தன்மையுடன் வேலை வாய்ப்பு கிடைத்திடும் என்ற நம்பிக்கை தற்போது உள்ளது. இதில் எள்முனை அளவுகூட சந்தேகம் வேண்டாம்.

நான் படித்த காலத்தில், கல்லூரி மாணவ, மாணவியர்களின் மாணவ தலைவராக இருந்து பணியாற்றி இருக்கிறேன். குறிப்பாக தமிழ் மன்றத்தின் தலைவராக இருந்து பணியாற்றி இருக்கிறேன். அந்த கல்லூரியின் மாணவ தலைவராக இருந்தும் பணியாற்றி இருக்கிறன். அந்த அனுபவம் எல்லாம் எனக்கு இருக்கிறது. அந்த அனுபங்களை ஒன்று திரட்டி, கல்லூரியில் படிக்கின்ற காலத்தில், என்ன நினைவுகள் இருந்ததோ, அவை எல்லாம் நிறைவேற்றிட வேண்டும். மாணவர்களுக்கு பட்டய படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, கொடுக்கின்ற வாக்குறுதி, பொறியியல் கல்லூரியை விட, வசதியான, அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய கூட்டுறவு பட்டய படிப்பு நிலையம் நமது திண்டுக்கல் மாவட்டத்தில் விரைவில் உருவாக்கப்படும்.

கூட்டுறவுத்துறையின் மூலமாக ஒரு கலைக்கல்லூரி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நாம் ஒரு படிக்கட்டு மேலே வந்துள்ளோம். திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பட்டய படிப்பு படிக்கும் கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்து, விரைவில் கல்லூரி அமைக்கப்படும்.

கூட்டுறவு பட்டய படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் வேலை வாய்ப்பு தேர்வு பயிற்சி நடக்கும். அப்போது, ஒரு நேர்மையான, வெளிப்படையான வேலைவாய்ப்பினை வழங்குவோம் என்ற வாக்குறுதியினை நிறைவேற்றுகின்ற வகையில், மனு செய்து விட்டால், வீடு தேடி வேலை வழங்கும் என்ற நோக்கத்தோடு இ;ந்த துறை செயல்படும் என்பதை மட்டும் இங்கு உள்ள மாணவ, மாணவியர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ச்சியாக, இங்கு படிக்கும் 600 மாணவ, மாணவியர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நானும் ஒரு பள்ளியில் இருக்கும் ஆசிரியரை போன்று உங்களை சந்தித்து, மாணவ, மாணவியர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர நடவடிக்கை, அனைத்து ஒத்துழைப்பு வழங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். காரணம் நமக்கு எதிர் காலம் என்பது கூட்டுறவுத்துறையின் மூலம் ஏற்படுத்தப்படும். மேலும், மாணவ, மாணவியர்களுக்கு தொழிற்கல்வி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வங்கிகளும் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் எதிர்காலத்தில் கூட்டுறவு மருந்துக்கடைகள் உருவாக்க வேண்டும். பொதுமக்களுக்கு கூட்டுறவு மருந்து கடைகளில் மூலமாக குறைந்த விலையில் மருந்து வாங்கும் வகையில் பணிகளை ஏற்படுத்த வேண்டும். மேலும், குறைந்த விலையில், தரமான மருந்து கூட்டுறவு கடைகளில் கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்க வேண்டும். இந்த துறைக்கு நிறைய குறிகோள்கள் இருக்கிறது. அந்த குறிக்கோளின் அடிப்படையில், மிகுந்த நம்பிக்கையோடு இங்கு வந்து, இந்த பட்டய படிப்பில், சேர்ந்திருக்கின்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எல்லா வகையிலும் இந்த அரசு உதவியாக இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

2021-22ஆம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டியிருக்கின்ற, மாணவ, மாணவியர்கள், எதிர் காலத்தில் தமிழகத்தில் சிறந்து விளங்க வேண்டும். எழை, எளிய மக்களுக்கு பயன்படுகின்ற வகையில், விவசாய துறை, கூட்டுறவுத்துறையில் தொடர்ச்சியாக பயின்று, நல்ல முறையில் வேலை வாய்ப்பினை பெற்று, எதிர் காலத்தில் சிறந்த விளங்க இந்த பயிற்சி வகுப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு கோடி படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கின்ற காலகட்டத்தில், இந்த பட்டய படிப்பினை நீங்கள் தேர்வு செய்து பயன்பெற வேண்டும்.

மேலும், இந்த கூட்டுறவு பட்டய படிப்பில் 2015-2016-ம் ஆண்டில் 80 மாணவ, மாணவியர்களும், 2016-17-ம் ஆண்டில் 40 மாணவ, மாணவியர்களும், 2017-18-ம் ஆண்டு 42 மாணவ, மாணவியர்களும், 2018-19-ம் ஆண்டில் 97 மாணவ, மாணவியர்களும், 2019-2020-ம் ஆண்டில் 86 மாணவ, மாணவியர்களும், 2020-21-ம் ஆண்டில் 175 மாணவ, மாணவியர்களும், 2021-22-ம் ஆண்டில் 605 மாணவ, மாணவியர்களும் கூட்டுறவு பட்டய படிப்பு படித்து வருகிறார்கள் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சித் தலைவர் திரு.மு.பாஸ்கரன், மண்டல இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மேலாண்மை இயக்குநர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் திரு.செல்வகுமார், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, திரு.கு.சத்தியமூர்த்தி, ஆத்தூர் நடராசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திரு.ராமகிருஷ்ணன், முதல்வர், திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் திரு.சு.கிருஷ்ணகுமார், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.தனலெட்சுமி ராமமூர்த்தி, உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.