Close

The Hon’ble Co-op Minister (May 1 Grama shaba Meeting)

Publish Date : 04/05/2022
.

செ.வெ.எண்:-01/2022

நாள்:01.05.2022

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சி, பொம்மனாங்கோட்டையில் நடைபெற்ற மே தின கிராமசபைக் கூட்டத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், கொத்தப்புள்ளி ஊராட்சி, பொம்மனாங்கோட்டையில் கிராம ஊராட்சி மன்ற தலைவி திருமதி.சுந்தரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மே தின கிராமசபைக் கூட்டத்தில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்; ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வி.ஆர்.சீனிவாசன் அவர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து குடிநீர் வசதிக்காக, செய்யப்பட்ட செலவின விவரங்கள், மேல்நிலை நீர் தொட்டிகள் பராமரிப்பு செலவின விவரங்கள், தெரு விளக்கு மற்றும் பம்பு செட்டிற்கான மின்சார செலவினங்கள், பொது நிதியிலிருந்து செய்யப்பட்ட மூலதான பணிகள் மற்றும் முன்னேற்றம் மற்றும் செலவின நிதி மற்றும் இதர செலவின விவரங்கள், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம், மாகத்மா காந்தி தேசிய ஊரக உறுதித்திட்ட பணிகளின் விவரங்கள், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் முன்மாதிரி கிராம விருது தொடர்பாகவும், திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் விவரங்கள், நெகிழி திரும்ப பெறும் கொள்கை, மீண்டும் மஞ்சபை திட்டத்தினை செயல்படுத்த கூடிய விவரங்கள், மகளிர் திட்டத்தின்கீழ் இலக்கு மக்கள் பட்டியல் தயார் செய்தல் விவரங்கள், முதியோர் உதவித்தொகை அழைப்பு எண்:14567 இதனை பயன்படுத்திட பொதுமக்களை கேட்டுக் கொள்ளுதல் மற்றும் விவசாய கடன் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. அதனை தொடர்ந்து, பொது மக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் பின்னர், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 மாதத்திற்குள், ஏழை, எளிய மக்களின் உயர் கல்வியை மேம்பாடுத்தும் வகையில் 5 கல்லூரிகளை வழங்கியுள்ளார்கள். கல்லூரியை வழங்கியதை மட்டுமின்றி கல்லூரிகளுக்கு புதிய கட்டிடங்களை கட்ட சுமார் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடும் செய்துள்ளார்கள். அரசு கலை கல்லூரிகளில் ஏழை, எளிய மக்கள், சாதாரண ரூ.2000, ரூ.3000 கட்டணத்தில் உயர் கல்வியை படிக்க வழி செய்யப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டு நமது மாவட்டத்திற்கு தொழிற்கல்லூரியும் வழங்க உள்ளார்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளார்கள். இன்னும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிதி ஆதாரங்களை திரட்டி, விரைவில் வழங்க உள்ளார்கள். ஒவ்வொரு கிராம பகுதிகளிலும் கல்வி, பொருளாதாரம் உயரவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும், குடிநீர் தொடர்பான சிரமங்களை போக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு காவேரி கூட்டுக்குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திண்டுக்கலில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ஆழியார் கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.900 கோடியில் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்கள். அத்திட்டம் வேடசந்தூர் பகுதிக்கு வரும் போது, இந்த வடக்கு பகுதிக்கும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 1996-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 495 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்பட்டது. அவைகள் தற்போது, பளமையானதாக உள்ளது. இத்தொட்டிகளை மாற்றியமைத்து, 30 ஆயிரம் லிட்டர், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட தொட்டிகள் கட்ட நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. ரெட்டியார்சத்திரம் பகுதியில் தகன மேடை அமைக்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொத்தப்புள்ளி கிராம ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் பல்வேறு அரசு நிதி மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, முன்மாதிரி ஊராட்சியாக மாற்றிட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இங்கு பொதுமக்கள் தெரிவித்த சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு வசதி உள்ளிட்ட அனைத்தும் உடனடியாக செயல்படுத்தப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பேசினார்.

.

.

இந்த கிராம சபைக்கூட்டத்தில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு. திரு.பிரேம்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திருமதி.ராணி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.ரெங்கராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் திருமதி.சுப்புலட்சுமி சண்முகவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.அமுதவள்ளி ஆறுமுகம், துறை அலுவலர்கள், ஊராட்சி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.