Close

The Hon’ble Coop minister -Kannivadi TP – Nalathittam

Publish Date : 25/01/2022
.

.செ.வெ.எண்:-39/2022

நாள்:24.01.2022

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், 596 பயனாளிகளுக்கு ரூ.77.82 இலட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டம், கன்னிவாடி முதல்நிலை பேரூராட்சி சமுதாயக்கூடத்தில்; இன்று(24.01.2022) நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி தெரிவித்ததாவது:-

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் மகளிர் சுயஉதவிக்குழு திட்டம். இத்திட்டத்தின் மூலம் ஏராளமான மகளில் பயனடைந்து வருகின்றனர். அதேபோல், முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், மத்திய அரசின் நிபந்தனைகளை தளர்த்தி, 60 வயதான அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்தவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் தான்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் வழியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்கள் அனைத்தும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையும் வகையில் சிறப்பான மக்களாட்சியை செயல்படுத்தி வருகிறார்கள். கொரோனா வைரஸ் தொற்று, மழை, வெள்ளம் போன்ற இடர்பாடுகளினால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நிமிடமும் மக்களுக்காக உழைத்து மக்கள் முதல்வராக திகழ்கிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என 536 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 வீதம் (ஒரு வருடத்திற்கான உதவித்தொகை மொத்தம் ரூ.64,32,000), உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை 60 பயனாளிகளுக்கு தலா ரூ.22,500 (மொத்தம் ரூ.13,50,000) என பல்வேறு அரசு நலத்திட்டங்களின் கீழ் மொத்தம் ரூ.77,82,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இன்றைய விழாவில் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 596 பயனாளிகள் பயனடைகின்றனர்.

தமிழக மக்களுக்காக, கூட்டுறவுத்துறை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 10 லட்சம் உறுப்பினர்கள் கொண்ட 55,000 சுய உதவிக்குழுக்களின் ரூ.2,761 கோடி மதிப்பிலான கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

கூட்டுறவுத்துறை மூலம் 5 பவுனுக்கு குறைவாக தங்க நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டதன் வாயிலாக ரூ.6,000 கோடி மதிப்பில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பவுன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி அறிவிப்பின் மூலம், திண்டுக்கல் மாவட்டத்தில் 50,168 நபர்களுக்கு சுமார் ரூ.188.11 கோடி நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. அவர்களின் நகைகள் விரைவில் திருப்பி வழங்கப்படவுள்ளது.

கூட்டுறவுத்துறையில் சுயஉதவிக்குழு கடனுக்கு 12 சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடன்தொகை ரூ.3 இலட்சத்திற்குட்பட்டது எனில் 7 சதவீதம் வட்டி வசூலிக்கும் வகையில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன், தொழிற்கடன் என பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நிலம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கறவை மாடு பராமரிக்க வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திருமதி ம.காசிசெல்வி, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் திரு.ப.க.சிவகுருசாமி, துணைத்தலைவர் திருமதி த.ராஜேஸ்வரி, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியத் திரு.எம்.கே.ரமேஷ்பாபு, தனி வட்டாட்சியத்(சமூக பாதுகாப்புத்திட்டம்) திருமதி ஆ.மீனாதேவி உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.