Close

The Hon’ble Coop Minister Program

Publish Date : 07/03/2022
.

...

செ.வெ.எண்:-11/2022

நாள்:07.03.2022

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் திண்டுக்கல் மாநகராட்சி லெப்பை குளத்தை ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள், திண்டுக்கல் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய திருமதி இளமதி ஜோதி பிரகாஷ் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (07.03.2022) நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் திண்டுக்கல் மாநகராட்சி 35 மற்றும் 48 வது வார்டுக்குட்பட்ட லெப்பை குளத்தை தூர்வரும் பணியினை துவக்கி வைத்தார்கள்.

மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்ததாவது:-

நகர்புற ஏழைகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் நோக்கில் ரூ.100.00 கோடி மதிப்பீட்டில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் சென்னை மாநகராட்சி இரண்டு மண்டலங்களிலும், ஏனைய மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலமும், 7 மாநகராட்சிகளிலும், 37 பேரூராட்சிகளிலும் ரூ.100.00 கோடி மதிப்பீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, திண்டுக்கல் மாநகராட்சி பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் 6 பணிகள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள உத்தேசிக்கபட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட அடியனூத்து பகுதியில் அமைந்துள்ள நுண்ணுயிர் உரம் தயார் செய்யும் கூடம் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டிலும், ரத்னா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.36.50 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண் 37 அன்னை நகரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.33.18 இலட்சம் மதிப்பீட்டிலும், வார்டு எண் 34 ஒடுக்கம் சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாநகராட்சிக்குச் சொந்தமான பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழப்பறைகளில் உறிஞ்சு குழி அமைக்கும் பணி ரூ.2.32 இலட்சம் மதிப்பீட்டிலும், திண்டுக்கல் மாநகராட்சிகுட்பட்ட லெப்பை குளம் தூர்வாரும் பணிக்கு ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.160.00 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள உள்ளது.

மேலும், மேற்கண்ட பணிகளுக்கு 22495 மனித சக்திகள் நேரடியாக பயன்படுத்தப்பட்டு ஒரு நபருக்கு ரூ.363/- கூலியாக அவர்களது வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தி பயன்பெற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும், திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கோபாலசமுத்திரம் குளத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்ததது. அதே போல் லெப்பை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தப்பட்டு, வாய்க்கால்களை சீரமைக்கப்படும் பணிகளை மேற்கொண்டு இக்குளத்தில் நீர் முழுமையான கொள்ளளவு நீர் நிரப்பினால் வேடபட்டி, பர்மாநகர் பொதுமக்களுக்கு தேiவான குடிநீர் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும்.

எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. புதியதாக பொறுப்பேற்றுள்ள வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் அவர்கள் நகராட்சி பொதுமக்களின் தேவைகளை அறிந்து வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வார்கள். வேடப்பட்டி பகுதியில் 2006-2011ஆம் ஆண்டில் மயானம் அமைக்கப்பட்டது. தற்போது மயானத்தினை சீரமைக்கப்பட்டு திண்டுக்கல் மாநகராட்சி பொதுமக்களுக்கு பயன்பாட்டில் உள்ளது. மேலும், வேடப்பட்டி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், இரயில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில், துணை மெயர் திரு.ச.ராஜப்பா அவர்கள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் திரு.எஸ்.சிவசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.