Close

The Hon’ble Cooperative Minister – Schemes and Bicycle -Reddiyarchatram Union

Publish Date : 22/09/2022
.

செ.வெ.எண்:-64/2022

நாள்:21.09.2022

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நியாயவிலைக்கடைகள், பள்ளி சமையல் கூடம் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் கூட்டுறவுத்துறை கடனுதவிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட மேலப்பட்டி, குட்டத்ததுப்பட்டி ஊராட்சி, கே.தருமத்துப்பட்டி ஊராட்சி ஆகிய இடங்களில் புதிய முழுநேர நியாயவிலைக்கடை, கசவனம்பட்டி ஊராட்சி திருமுருகன் நடுநிலைப்பள்ளியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையல் கூடம், கன்னிவாடி பேருராட்சியில் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் வசதி, நடைமேடை, கழிப்பறைகள் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று(21.09.2022) திறந்து வைத்தார்.

மேலும், அனுமந்தராயன்கோட்டை லயோலா மேல்நிலைப்பள்ளியில் 46 மாணவ, மாணவிகளுக்கும், குட்டத்து ஆவரம்பட்டி செயின்ட் பிரான்சிஸ் சேவியர் மேல்நிலைப் பள்ளியில் 81 மாணவ, மாணவிகளுக்கும், கோனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 75 மாணவ, மாணவிகளுக்கும், கன்னிவாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 65 மாணவிகளுக்கும், கன்னிவாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 120 மாணவர்களுக்கும், கே.தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 71 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். கோனுாரில் கூட்டுறவுத்துறை சார்பில் 26 நபர்களுக்கு ரூ.26.05 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள், கே.தருமத்துப்பட்டியில் வருவாய்த்துறை சார்பில் திண்டுக்கல் (மேற்கு) வட்டம் பன்றிமலையைச் சேர்ந்த மலைவாழ் கிராம மக்கள் 16 நபர்களுக்கு ரூ.8.68 லட்சம் மதிப்பீட்டில் இலவச விட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எல்லாருக்கும் எல்லாம் என்ற வகையில், அரசின் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார். அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் திடடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உருவாக்கி வருகிறார். அரசின் திட்டங்களை மாணவ, மாணவிகள நல்ல முறையில் பயன்படுத்தி உயர்கல்வி பெற்று திறமைசாலிகளாக உருவாக வேண்டும்.

கடந்த ஆட்சி காலத்தில் நிறுத்தப்பட்ட முதியோர் உதவித்தொகை மற்றும் தற்போது உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள முதியோர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் அனைத்து பகுதி மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் சீரான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நியாயவிலைக்கடைகளில் சோப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விருப்பம் உள்ளவர்கள் அவற்றை வாங்கி பயன்பெறலாம். இந்தப்பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. அவ்வாறு கட்டாயப்படுத்தும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குட்டத்துப்பட்டியில் நியாயவிலைக்கடைக்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படும். அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டு, முழுநேர நியாயவிலைக்கடைகள் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.பிரேம்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.எஸ்.சரவணன், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் திரு.சிவகுருசாமி, திண்டுக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.கோ.காந்திநாதன், மாவட்ட கூட்டுறவ ஒன்றிய மேலாண்மை இயக்குநர் திரு.செல்வக்குமார், துணைப்பதிவாளர்(பொது விநியோகத் திட்டம்) திரு.திருமாவளவன், முக்கிய பிரமுகர் சத்தியமூர்த்தி, கன்னிவாடி பேரூராட்சித்தலைவர் திருமதி தனலட்சுமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி ஆரோக்கியசுதா செல்வி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சார் பதிவாளர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.