The Hon’ble Education minister – Inspection – Oddanchatram
செ.வெ.எண்:-29/2024
நாள்:-11.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒட்டன்சத்திரம், வேடசந்துார் பகுதி பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நூலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார்.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் வேடசந்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று(11.09.2024) ஆய்வு மேற்கொண்டார். ஒட்டன்சத்திரம் நெருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் கழிவறை கட்டடங்களை பார்வையிட்டார். தொழிற்பயிற்சி பிரிவு மாணவர்களையும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
முன்னதாக வேடசந்துார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். v
இந்த ஆய்வின்போது, ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.