The Hon’ble Education Minister- Inspection
செ.வெ.எண்:-21/2024
நாள்:-09.09.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், நூலகங்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றார். அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று(09.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாணவர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவிக்கையில், ”காலை வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் பயில வேண்டும்” என தெரிவித்தார்.
பள்ளி அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், தமிழ்க்கூடல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், சிறப்பு தேசிய மாணவர் படை முகாமில் செயலாற்றிய மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்த ஆய்வின்போது, நகர்மன்ற துணைத் தலைவர் திரு.மாயக்கண்ணன், ஆசிரியர்கள் கலந்து கொண்டார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.