Close

The Hon’ble Food and Civil Supplies Minister(Oddanchtram)

Publish Date : 25/07/2022
.

செ.வெ.எண்:-55/2022

நாள்: 19.07.2022

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஒட்டன்சத்திரம் காமாட்சி மஹாலில் செஸ் போட்டியை துவக்கி வைத்து வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ரொக்க பரிசுகளை வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காமாட்சி மஹாலில் செஸ் போட்டியை துவக்கி வைத்து, 10, 12-ஆம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) திரு.ச.தினேஷ்குமார்,இ.ஆ.ப., அவர்கள் தலைமை நடைபெற்றது.

இவ்விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு 36 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சன்றிதழ்கள், பாராட்டு கோப்பை மற்றும் ஊக்கத்தொகையும், 83 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கதொகையும்; 25 அரசு உதவி பொரும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் பலகைளை வழங்கினார்.

விழாவில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு பொறுப்பேற்ற பின்புதான், எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் எல்லா நிலையை அடைய வேண்டும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துணை முதலமைச்சராக இருந்த காலத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சாதனை படைக்கும் வகையில் அதிகளவிலான கடனுதவிகளை தனது கரங்களால் வழங்கினார்.

இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் செஸ் ஒலிம்பியாட்-2022 சுடர் கொண்டு வரப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திங்கள் கிழமை மாலையில் மதுரைக்கு வர இருக்கிறார்கள். அதன் பின்பாக திண்டுக்கல் மாவட்டத்திற்கும் வர இருக்கிறார்கள். செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சார்ந்த விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று செய்து வருகிறார்கள். உலகத்தில் சிறந்த இடமாக தமிழ்நாட்டை சார்ந்த மாமல்லபுரத்தினை தேர்வு செய்துள்ளது நமது மாநிலத்திற்கு கிடைத்த பெருமை. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செஸ் விiளாயட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். ஒட்டன்சத்திரம் தொகுதி அரசு பள்ளி 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மற்றும் அரசு உதவி பெரும் 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு பள்ளிகளை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு செஸ் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் ஓட்டன்சத்திரம் தொகுதியில் போட்டிகள் நடத்த முடிவு செய்து, அனைத்து பள்ளிகளுக்கும் செஸ் பலகை வழங்கப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.

ஒட்டன்சத்திரம் தொகுதியை சார்ந்த மாணவ, மாணவியர்கள் கபாடி போட்டியில் தொடர்ந்து 7 ஆண்டுகள் மாநில அளவில் முதலிடம் பெற்று உள்ளார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். எனவே, விளையாட்டிலும் ஆர்வமாக இருந்து தங்கள் வாழ்க்கையில் முன்னேற்றி கொள்ள வேண்டும். படிக்கின்ற மாணவர்கள் படிப்பு மற்றும் விiளாயட்டில் முன்னேற வேண்டும். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கல்விக்காக 33 ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்துள்ளார்கள். அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்த மாணவ, மாணவியர்களுக்கு உயர் கல்வி படிக்கும் போது மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். நபர்டு வங்கியின் மூலம் பள்ளிகளுக்கு கட்டிட வசதிகள் மேம்படுத்தப்படும். ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாகவும், நடுநிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் குறிக்கோளுடன் படிக்க வேண்டும். எனவே, மாணவர்கள் பெற்றோர்களின் கடமை, பள்ளியின் பெருமை, சமுதாயத்தின் பெருமையை நிலைநாட்ட வேண்டும்.

44-வது செஸ் ஒலிம்பியாட்-2022 போட்டியை முன்னிட்டு அரசு மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெரும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு 36 மாணவ, மாணவியர்கள் சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்க வருகை தர உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்துள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்று 14 மாத காலத்தில் உயர்கல்வித்துறையின் மூலமாக 20 கல்லூரிகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் 1 கல்லூரி, இந்துசமய அறநிலையத்துறையின் மூலமாக 10 கல்லூரிகள், தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி கல்லூரி 11, சித்தா கல்லூரி 1 என மொத்தம் 43 கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்குவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உயர்கல்வி மூலமாக 1 கல்லூரியும், கூட்டுறவுத்துறையின் சார்பில் ஆத்தூரில் 1 கல்லூரி, ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆண்கள், பெண்கள் படிக்கும் வகையில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்ற 36 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சன்றிதழ்கள், பாராட்டு கோப்பை மற்றும் ஊக்கத்தொகையும், 83 மாணவ மாணவியர்களுக்கு ஊக்கதொகையும் மற்றும் 25 அரசு உதவி பொரும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு செஸ் பலகைளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ்,மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமதி ரோஸ் பாத்திமா மேரி, நகர் மன்ற தலைவர் திரு.பெருமாள்சாமி, நகர்மன்ற துணைத்தலைவர் திரு.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி அய்யம்மாள், ஒட்டன்சத்திரம் நகர்மன்ற தலைவர் திரு.திருமலைச்சாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, முக்கிய பிரமுகர்கள் திரு.ராஜாமணி, ஜோதீஸ்வரன், தர்மராஜ், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.முத்துச்சாமி மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.