The Hon’ble Food and Civil Supply Minister – Development schemes – Inaguration

செ.வெ.எண்:-30/2023
நாள்:13.09.2023
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் ரூ.52.61 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.16.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி,
120 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(13.09.2023) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, ரூ.52.61 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.16.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள், மரிச்சிலம்பு ஊராட்சியில் பூலாம்பட்டி ஆதிதிராவிடர் காலனியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.30.00 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடம், பூலாம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை, வில்வாதம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.12.61 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் என மொத்தம் ரூ.52.61 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மேலும், மரிச்சிலம்பு ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10.00 மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.105.67 இலட்சம் மதிப்பீட்டில் 3 இடங்களில் சாலை பணிகள், வில்வாதம்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.133.18 இலட்சம் மதிப்பீட்டில் 5 சாலை பணிகள், அக்கரைப்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.47.19 இலட்சம் மதிப்பீட்டில் சாலை, கீரனுார் பேரூராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் 3.50 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத்தொட்டி, மேல்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.141.78 இலட்சம் மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டடம் மற்றும் ஒரு ஆய்வகக் கட்டடம், மேல்கரைப்பட்டியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ரூ.84.06 இலட்சம் மதிப்பீட்டில் 9 இடங்களில் சாலை பணிகள், கோட்டத்துறை ஊராட்சியில், ஆண்டிநாயக்கன்வலசில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.30.48 இலட்சம் மதிப்பீட்டில் 4 இடங்களில் சாலைப்பணிகள், கோட்டத்துறை ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.58.53 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் மற்றும் கழிவுநீர் கால்வாய், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.45.83 இலட்சம் மதிப்பீட்டில் சாலை, கொக்கரக்கல் வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ. 105.90 மதிப்பீட்டில் 5 வகுப்பறை கட்டடம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.9.80 இலட்சம் மதிப்பீட்டில் 4 இடங்களில் சிமெண்ட் கான்கிரீட் சாலை பணிகள், ராஜாக்கப்பட்டி ஊராட்சியில், ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.51.95 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம் தடுப்புச் சுவர் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.154.65 இலட்சம் மதிப்பீட்டில் 3 இடங்களில் சாலைப்பணிகள், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.8.00 இலட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.5.26 இலட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் சிமெண்ட் கான்கிரீட் சாலை, ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.41.82 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.106.90 இலட்சம் மதிப்பீட்டில் 4 இடங்களில் சாலை பணிகள், மிடாப்பாடி ஊராட்சியில், ஆதிதிராவிடர் காலனியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மற்றும் ரூ.51.39 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.9.20 இலட்சம் மதிப்பீட்டில் 3 இடங்களில் சாலை பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.97.66 இலட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் சாலை பணிகள், தாழையூத்து ஊராட்சியில், பெரியமொட்டனாத்து ஆதிதிராவிடர் காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் மற்றும் ரூ.33.26 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் ரூ.56.13 இலட்சம் மதிப்பீட்டில் 6 இடங்களில் சாலை பணிகள், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.53.98 இலட்சம் மதிப்பீட்டில் 2 இடங்களில் சாலை பணிகள் என மொத்தம் ரூ.16.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மேலும், கீரனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26 மாணவ, மாணவிகளுக்கும், கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப்பள்ளியில் 56 மாணவ, மாணவிகளுக்கும், தாழையூத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 38 மாணவ, மாணவிகளுக்கும் என மொத்தம் 120 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மதிவண்டிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தமிழத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடன் ரூ.12.00 இலட்சத்திலிருந்து ரூ.20.00 இலட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தகுதியான இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ஆம் தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயனடையவுள்ளனர். அவர்களுக்கான தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். ஒரு குடும்பத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறும் ஆண் இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுடையவராவர். இந்த திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வு பெறாதவர்களுக்கு அதற்கான காரணம் குறித்து குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தகுதியிருப்பின் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அதன்பேரில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியிருப்பின் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத அற்புதமான திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார்.
பெண்கல்வியை போற்றும் விதமாகவும், உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழகத்தை தாங்கும் அறிவியல் வல்லுநர்களாகவும், மருத்துவராகவும், பொறியாளராகவும், படைப்பியலாளராகவும், நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும். உருவாக அடித்தளமாக “புதுமைப் பெண்” என்னும் உன்னத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 31,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 18.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை எதிர்பாராதவிதமாக தொலைந்து போனால், புதிய குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பித்தால் வீட்டிற்கு தபாலில் குடும்ப அட்டை வந்து சேரும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகததில் சுமார் 3.50 இலட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் இயந்திரம் பொருத்தப்பட்ட அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற ஏழை, எளிய வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடு வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் இன்று நாளொன்றுக்கு ரூ.294 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் பழுதடைந்த சாலைகள் அனைத்தும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 201 கி.மீட்டர் துாரம் ஊராட்சி ஒன்றிய சாலைகள் நபார்டு திட்டத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் உயர்கல்வித்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ள, இந்த கல்லுாரிகளுக்கான கட்டடங்கள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல், அரசுப் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக காளாஞ்சிப்பட்டியில் ரூ.10.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சிறந்த வல்லுநர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளித்து சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்காக தொப்பம்பட்டியில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளது.
ஒட்டன்சத்திரம், பழனி சட்டமன்ற தொகுதிக்கு காவிரி நீர் ஆதாரத்தைக்கொண்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த ரூ.1000 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் வரும் 30 ஆண்டு காலங்களுக்கு இங்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. அந்த வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக மாற்றப்பட்டதையடுத்து பழனி அரசு மருத்துவமனையானது மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, ரூ.70 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மரிச்சிலம்பு, வில்வாதம்பட்டி, அக்கரைப்பட்டி, மேல்கரைப்பட்டி,
கோட்டத்துறை, கொக்கரக்கல்வலசு, முத்துநாயக்கன்பட்டி, மிடாப்பாடி, தாழையூத்து ஆகிய ஊராட்சிகள் மற்றும் கீரனுார் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.52.61 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, ரூ.16.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 120 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, பேருந்து வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி சத்தியபுனா ராஜேந்திரன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், உதவி இயக்குநர்(பேரூராட்சிகள்) திருமதி மனோரஞ்சிதம், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.எஸ்.கிருஷ்ணசாமி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், ஊராட்சித்தலைவர் திரு.கே.சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.