Close

The Hon’ble Food and Civil Supply Minister-Inspection- Crop Damaged fire

Publish Date : 11/03/2025
.

செ.வெ.எண்:-19/2025

நாள்:-06.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், 16புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் 16புதுாரில் தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் 16புதுாரில் விவசாய நிலத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 26.4 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் முழுமையாக எரிந்து கருகின.

இந்த பகுதிக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் சென்று கருகிய பயிர்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது விவசாயிகள், “சுமார் 26.4 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர்கள் முழுமையாக எரிந்து கருகிவிட்டன. மொத்தத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளப் பயிர்கள் சேதமடைந்துள்ளன” என தெரிவித்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.