Close

The Hon’ble Food and Civil Supply Minister – KMUT – 2nd Phase – Inaguration

Publish Date : 14/11/2023
.

செ.வெ.எண்:-30/2023

நாள்: 10.11.2023

திண்டுக்கல் மாவட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் வரலாற்று சிறப்புமிக்க திட்டம், இத்திட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3.95 இலட்சம் குடும்பத்தலைவிகள் பயனடைந்துள்ளனர் –

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை வழங்கி தெரிவித்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் கூடுதலாக இணைந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் பணியை சென்னையில் இன்று(10.11.2023) தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், தோட்டனுாத்து ஊராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், குடும்பத்தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டையினை இன்று(10.11.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். 5 பவுனுக்கு குறைவான நகைக்கடன்கள், கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுயஉதவிக்குழு பெற்ற கடன்களை தள்ளுபடி செய்தார். தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதை தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே தலைசிறந்த முதல்வராக திகழ்கிறார். தமிழத்தை அனைத்துத் துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு, தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் அரிய திட்டங்களினாலும், செயல்பாடுகளினாலும் தமிழகம் அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டங்களில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகவும், இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடி திட்டமாகவும், பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வகையிலும், பொருளாதார நிலையை மேம்படுத்திடும் வகையில் குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப்பெறாதவர்கள் தகுதியிருப்பின் வருவாய் கோட்டாட்சியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியிருப்பின் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகை இன்று(10.11.2023) வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் பணியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இன்று(10-11-2023) தொடங்கி வைத்துள்ளார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6,86,171 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் முதற்கட்டமாக 3,74,641 குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இன்றையதினம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டாம் கட்டமாக 21,095 குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான பற்று அட்டைகள் வழங்கப்படுகிறது. அதில் இந்த விழாவில் 3,142 குடும்பத் தலைவிகளுக்கு பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 3,95,736 குடும்பத்தலைவிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத அற்புதமான திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தியுள்ளார். வாழ்நாள் முழுவதும் கிடைக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பேர் சொல்லும் திட்டமாகும்.

பிரதிபலன் பாராமல் வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சுயமரியாதையோடு சமூகத்தில் அவர்கள் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கொரோனா நிவாரண உதவியாக 2.30 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000, 14 வகையான மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. பெண்கள் நகரப் பேருந்துகள் கட்டமில்லாமல் பயணம் மேற்கொள்ள வழிவகையும், “இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48“ திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி, தமிழகத்தில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கு ஆகும் மருத்துவ சிகிச்சைக்கான செலவில் ரூ.1 இலட்சம் வரை அரசே ஏற்கும். மக்களைத் தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மகளிருக்கு அரசு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள வழிவகை ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஏராளமான பெண்கள் பயனடைந்து வருகின்றனர். தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற ஏழை, எளிய வீடு இல்லாத மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் மகளிருக்கு சொத்தில் சமஉரிமை, வேலைவாய்ப்பில் முன்னரிமை, உள்ளாட்சி அமைப்பில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டன. அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தற்போது மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் 10,000 கி.மீட்டர் சாலைகளை சீரமைக்க ரூ.4,000 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அரசு கல்லுாரிகள் உள்ளன. நத்தம் சட்டமன்ற தொகுதியில் விரைவில் அரசு கல்லுாரி கொண்டு வரப்படும். “நான் முதல்வன்“ திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு தொழிற்பயிற்சி அளிப்பட்டதில் சுமார் 13 இலட்சம் பேர் பயனடைந்து வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு 1.50 இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்படவுள்ளது. அரசு பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் மூலம் 31,000 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 17.50 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர்.

தமிழகத்தில் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ஆட்சிப்பொறுப்பேற்ற 2 ஆண்டுகளில் தமிழகத்தில் இதுவரை சுமார் 15 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தை குடிசை இல்லா மாநிலமாக மாற்ற ஏழை, எளிய வீடு இல்லாத மக்களுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் கீழ் வீடு வழங்கப்பட்டு வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் இன்று நாளொன்றுக்கு ரூ.294 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம் இன்னும் கூடுதலாக உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வேலை நாட்களை 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய சாலைகளை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குடிநீர், சுகாதாரம், சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கல்வி, பேருந்து வசதி, உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன், பொதுமக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவற்றை செயல்படுத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துணை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசினார்.

இவ்விழாவில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், திரு. அ.இராஜா, சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், திரு. சு.பழனியம்மாள், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கமலக்கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சிவக்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு. பரமேஸ்வரி, தோட்டனுாத்து ஊராட்சி மன்ற தலைவர், திரு. ஆர்.சித்ரா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி கார்த்திகா, ¬திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திரு.வில்சன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.