Close

The Hon’ble Food and Civil Supply Minister – marriage Function

Publish Date : 03/07/2025
.

செ.வெ.எண்:- 03/2025

நாள்:-02.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயிலில் 12 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அருள்மிகு குழந்தைவேலப்பர் திருக்கோயிலில் 12 இணைகளுக்கு இன்று(02.07.2025) திருமணம் நடத்தி வைத்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2025 – 2026ம் ஆண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் இன்று(02.07.2025) ஒட்டன்சத்திரம், காந்திநகர், தங்கச்சியம்மாபட்டி, அமரபூண்டி, திண்டுக்கல், பேகம்பூர், கூவனூத்து, யாப்பன்பட்டி, சீலையம்பட்டி, ஆத்தூர் சிக்கனம்பட்டி மற்றும் தேனி சீலையம்பட்டி ஆகிய ஊர்களிலிருந்து வரப்பெற்ற 12 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே, 4 கிராம் தங்கத் தாலி உட்பட சீர்வரிசைகள் வழங்கி ஒட்டன்சத்திரம் மற்றும் பழனியில் 7 இணைகளுக்கு திருக்கோயில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 இணைகளுக்கு சுமார் ரூ.13.00 இலட்சம் செலவில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இவை தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 1800 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் திரு.சுப்பிரமணியன், துணை ஆணையாளர் திரு.வெங்கடேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.