Close

The Hon’ble Food and Civil Supply Minister – Meeting

Publish Date : 12/02/2024
.

செ.வெ.எண்:-27/2024

நாள்:11.02.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி, அவர்கள் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை இன்று(11.02.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். கிராமங்களின் வளர்ச்சியில்தான் உண்மையான வளர்ச்சி உள்ளது என்பதற்காக கிராமப்புற பகுதி மக்களின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், படித்த இளைஞர்களின் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கிராமங்கள் பொருளாதார மேம்பாடு அடையும்போது தனிமனித வருவாய் உயரும் என்பதற்காக கிராமப்புற பகுதிகளில் தொழில் வளர்ச்சிக்காக விவசாயம் சார்ந்த தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்கள், பொது சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பான சாலை பயணத்தை வழங்கும் வகையில் சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மழை, வெயில் காலங்களில் பயணிகளை பாதுகாக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது செயல்பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்களை மேம்படுத்தி செயல்படுத்துவதுடன், தற்போதைய மக்கள்தொகை மற்றும் எதிர்கால மக்கள்தொகை உயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய குடிநீர் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் பொதுமக்களின் வசதிக்காக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், நபார்டு திட்டம், நமக்குநாமே திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கனிமம், 15-வது நிதிக்குழு மானியம் என பல்வேறு திட்டங்களின் கீழ் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மொல்லம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை, சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட 1.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி திறந்து வைத்தல் என ரூ.53.48 இலட்சம் மதிப்பீட்டிலும், மானூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கழிவு நீர் வாயக்கால், பள்ளிச் சுற்றுச்சுவர், நெடுஞ்சாலைத்துறை மூலம் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் ரூ.2.84 கோடி மதிப்பீட்டிலும், தாளையூத்து ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கழிவு நீர் வாய்க்கால், வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை, தானியக் கிட்டங்கி , அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணிகள் ரூ.2.32 கோடி மதிப்பீட்டிலும், வடக்குலட்சலப்பட்டியில் வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை அமைத்தல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் நியாய விலைக் கடை கட்டடம் திறந்து வைத்தல் என ரூ.57.97 இலட்சம் மதிப்பீட்டிலும், கோரிக்கடவு ஊராட்சியில் சிமெண்ட் கான்கிரீட் சாலை, தானியக் கிட்டங்கி கட்டுதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டிமுடிக்கப்பட்ட பயணியர் நிழற்குடை திறந்து வைத்தல் என ரூ.46.80 இலட்சம் மதிப்பீட்டிலும், கோவிலம்மாபட்டி ஊராட்சியில் ஓரடுக்கு மெட்டல் சாலை, சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணை, சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் ரூ.89.92 இலட்சம் மதிப்பீட்டிலும், நாச்சியப்பக்கவுண்டன்வலசு கிராமத்தில் சிமெண்ட் சாலை, அங்கன்வாடி கட்டடம் கட்டுதல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட தானியக் கிட்டங்கி திறந்து வைத்தல் என ரூ.31.36 இலட்சம் மதிப்பீட்டிலும், கோட்டத்துறை ஊராட்சியில் சிமெண்ட் சாலை, கழிவு நீர் வாய்க்கால், வண்ணக்கல் பதித்தல், ஓரடுக்கு மெட்டல் சாலை, தானியக் கிட்டங்கி , சமுதாய கிணறு, சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் ரூ.2.73 கோடி மதிப்பீட்டிலும், தொப்பம்பட்டி ஊராட்சியில் ஆலாவலசில் ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் திறந்து வைத்தல், தொப்பம்பட்டி ஊராட்சியில் சிமெண்ட் சாலை, வண்ணக்கல் பதித்தல், சிறுபாலம், தானியக்கிட்டங்கி கட்டடம், சமுதாயக் கிணறு மற்றும் நெடுஞ்சாலை துறை மூலம் தார்ச்சாலை, சமுதாயக் கூடம் அமைக்கும் பணிகள் ரூ.6.71 கோடி மதிப்பீட்டிலும் என ஆகமொத்தம், இன்றையதினம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களின் கீழ் ரூ.17.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பகுதிகளில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(11.02.2024) திறந்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவு அளிக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பெ.திலகவதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் திருமதி சுலோக்சனா, திருமதி தமிழரசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.